தாயின் விவாதமும் சரிதான். "வயதாகிக்கொண்டே போகிறது, இன்னும் எத்தனை வயது வரில் தான் கல்யாணத்தை ஒதுக்குவது?"
"வேலை..." என்று ஆரம்பித்தாலே அவள் தாய் சீறுவாள். "வேலை முக்கியம்தான்! ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது! குடும்பம், குழந்தை என்று வேண்டாமா?"
அவள் வாயை மூடிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள்.
"இன்னிக்கு சீக்கிரம் வா. வீட்டிற்கு சிலபேர் வருகிறார்கள்."
அவள் தாயை முறைத்துப் பார்த்தாள். தாய் அவளை கண்டுகொள்ளவில்லை.
**
"ஊருக்குப்போய் உன்னை காண்டாக்ட் செய்கிறேன்," என்றுச்சொல்லிச் வடக்கே சென்றவன் இடமிருந்து ஒரு தகவலும் இல்லை. எதோ ஒரு மெயில் மட்டும் வந்தது - எக்கச்செக்க வேலை என்று.
எதை வைத்து அவளும் காத்திருந்தாள்? அவன் என்ன ஐ லவ் யு சொன்னானா, கட்டி முத்தமிட்டானா, இல்லை மணம் செய்துக்கொள்கிறேன் என்றானா? இவளாகவேத்தானே நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்தாள்? அவன் புன்னகைத்தது தனக்காகத்தான் என்று? அவன் வேலையில் ஒரு சந்தேகம் கேட்டால், தன்னுடன் பேசுவதற்கு என்று? வண்டியில் கொண்டு விடுகிறது ஏதோ ஒரு தனிப்பட்ட சந்தர்ப்பம் ஏற்ப்படுத்திக் கொள்வதற்கு என்று?
எதற்காக காத்துக் கொண்டிருகிறாள் இவள்?
அவள் சீக்கிரம் திரும்புவதைக் கண்டத் தாய் முகம் மலர்கிறாள். பெண்ணை அழகாக அலங்காரம் செய்கிறாள்.
வரன் தன் குடும்பத்துடன் வருகிறான். கம்பீரமாக இருக்கிறான். நல்ல வேலையில் இருக்கிறானாம். சிரித்தமுகம், சுலபமாக பழகும் சுபாவம்.
ஆனால் அவள் மனம் ஏன் அவனுடன் வந்திருக்கும் தம்பியையே நாடுகிறது?
"ஏய்! எப்படி, ஆச்சரியமா இருக்கா என்ன பார்த்து? நீதான் பெண்ணுன்னு தெரிஞ்சதும் ரெடி ஆயிட்டேன்," என்று அவன் சொன்னப்பொழுது ஏன் யாரோ தன்னைக்கத்தியால் கிழிப்பதுப் போல ஒரு எண்ணம்?
"இந்த வரன் வேண்டாமம்மா," என்று தாயிடம் சொல்கிறாள். ஏன், என்ன கொறச்சல் அவனுக்கு என்ற பொழுது, என்ன சொல்வது என்று தெரியாமல் திணறுகிறாள்.

No comments:
Post a Comment