இன்று காலை ஒன்பது மணிக்கு நாங்கள் ஐவர் ஒரு ப்ரோக்ராமிற்காக ரெடியாக இருக்க வேண்டிய நிர்பந்தம். எங்களை ஆடும் இடத்திற்கு ஏழு மணிக்கே வர சொல்லி விட்டார் மேக் அப் போட வேண்டியவர். நாங்களும் சமர்த்தாக போய் சேர்ந்து விட்டோம். ஆனால் அவரோ, எட்டு மணியாகியும் வந்து சேரவில்லை! வேறு எதோ குழுவிற்கு மேக் அப் போட்டு விட்டு வந்தார். அதனால் நாங்கள் தயாராக பத்து மணி ஆகி விட்டது! எங்களை முதலில் ஆட அனுப்ப வேண்டிய இடத்தில் மூன்றாவதாக அனுப்பினார்கள். "இன்னும் தயார் ஆகாவில்லையா" என்ற கேள்வி வேறு!
நன்றாக தான் போடுகிறார், ஆனால் அதற்காக எல்லாருக்கும் மேக் அப் செய்வதற்கு ஒப்புக்கொள்வது தவறில்லையா! இது நேற்று இன்று இல்லை, எப்பவுமே நடப்பது தான். எந்த கச்சேரிக்கும் சரியாக வந்து சேருவதில்லை. ஆடுபவர்களுக்கு அவரை காணும் வரை பீதிதான்.
இந்த மாதிரி நிறைய பேர்களுக்கு ஒப்புக்கொண்டு நன்றாக சம்பாதிக்கலாம், ஆனால் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியுமா? அளவோடு வேலையை ஏற்று அதை நேரத்தோடு ஒழுங்காக செய்து நல்ல பெயர் வாங்கினாலே வர வேண்டியது வந்து சேராதா! இது என்ன "வேண்டாம்" என்று சொல்லத் தெரியாததனால் வரும் வினையா இல்லை, "ஐயோ போய்விடப்போகிறதே" என்ற ஐயத்தினால் வருவதா?
தொழில் சுத்தம் என்பது நன்றாக செய்வது மட்டும் அல்ல. செய்ய வேண்டிய நேரத்தில் அதை முடிப்பதும் கூட!

Good one...and well said..
ReplyDeleteThank you Sezhiyan.
ReplyDelete