மதுக்கு வேலைக்கு ஆள் அமைந்தது ஒரு பெரிய திருப்தி. புது இடத்துக்கு வந்த பிறகு அது தான் முதல் கவலை. அக்கம் பக்கத்தில் வேலை செய்பவர்களுடைய நேரம் ஒத்து வரவில்லை. எப்படியோ வலைவீசி சிக்கினாள் குமுதா என்று ஒருவள். சற்று தள்ளி வீடு என்பதால் ஒரே வேளைதான் வருவாள், சற்று தாமதமாக வந்து, இருந்து முடித்துவிட்டு போவதாகச் சொன்னாள். ஏதோ ஒன்று, வேலை நடந்தால் போதும் என்றிருந்தது. வயதான தாயுடன் தனியாக இருக்கும் மது எனும் மதுவந்திக்கு அறுபது வயதில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது கடினமாக இருந்தது.
Sunday, January 20, 2019
Sunday, October 21, 2018
அன்பின் ராகம்
மூங்கில் ஒரு குழலாக
குழலிலிருந்து உன் இசையாக
உன் இசை இதயங்களில் குடிபோக
உன் இதழ்கள் என்னை உயிர்ப்பிக்க
குழலிலிருந்து உன் இசையாக
உன் இசை இதயங்களில் குடிபோக
உன் இதழ்கள் என்னை உயிர்ப்பிக்க
Saturday, September 8, 2018
உறவுகள் ஜாக்கிரதை - 2
முதல் பாகம் படிக்க
சஞ்சீவ் இனிப்புடன் வந்தான்.
"என்ன, வேற வேலை கடைச்சிடுத்தா?" என்று ராதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்.
சஞ்சீவ் இனிப்புடன் வந்தான்.
"என்ன, வேற வேலை கடைச்சிடுத்தா?" என்று ராதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்.
Sunday, September 2, 2018
உறவுகள் ஜாக்கிரதை - 1
"என்ன அதிசயம்? இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பறீங்க?" சஞ்சீவ் ராதாவைப் பார்த்து கேட்டான். "ஆஃபீஸ்ல விளக்க யாரு அணைக்கறது!?"
ராதா சிரித்தாள். "இந்த கிண்டல் தானே வேண்டாங்கறது! என்னவோ நான் மட்டும் லேட்டா வேலை செய்யற மாதிரியும், நீங்க எல்லாம் சரியா கிளம்பற மாதிரியும்!"
ராதா சிரித்தாள். "இந்த கிண்டல் தானே வேண்டாங்கறது! என்னவோ நான் மட்டும் லேட்டா வேலை செய்யற மாதிரியும், நீங்க எல்லாம் சரியா கிளம்பற மாதிரியும்!"
Sunday, June 17, 2018
வரம்புகள்
"டேபிளை ஒழிச்சிடு," என்று நாகலட்சுமி தன் மகள் ராதாவிடம் கூறும்பொழுது, மகன் கிட்டாவும் தொடர்ந்தான். நாகலட்சுமியின் தங்கை வனஜா தன் மகள் காமினிக்கு சைகை செய்தாள், "நீயும் ஒத்தாசை செய்," என்று.
வனஜாவின் மகன் பிரபு எழுந்து, தன் போனை நோண்டிக்கொண்டே வாச உள் பக்கம் நடந்தான். "வாயேன் பிரபு, நீயும் உதவலாமே," என்று நாகு அவனை அழைத்தாள். காதில் விழவில்லையோ இல்லை விழாத மாதிரி நடித்தானோ, தெரியவில்லை; சோஃபாவில் அமர்ந்து காதில் இயர் போன்ஸ் மாட்டிக்கொண்டு வெளி உலகுடன் தொடர்பை துண்டித்தான்.
Saturday, May 26, 2018
துடுப்பில் அடங்கிய துடிக்கும் நினைவுகள்
"ஐயோ, தோசை ரொம்ப ஒட்டிக்கறது," மருமகள் சாரதா அலுத்துக் கொண்டாள். "ஏன் தான் இந்த வெல்ல தோசையை பண்ண ஆரம்பிச்சேனோ!"
மெதுவாக அங்கு நடந்து வந்த மாமியார் விமலா, "நான் பார்க்கட்டுமா?" என்று கேட்டாள்.
மெதுவாக அங்கு நடந்து வந்த மாமியார் விமலா, "நான் பார்க்கட்டுமா?" என்று கேட்டாள்.
Friday, April 13, 2018
ராம்
ருக்மிணியால் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மேடை மீது அவளுடைய தோழி மது அவையோர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வணங்கினாள். தன்னுடன் ஆடிய, அவள் பயிற்சி கொடுத்த மாணவ மாணவிகளும் அற்புதமாக ஆடியிருந்தார்கள். அவையில் எழுந்த கரகோஷம் அதற்கு அத்தாட்சி. இது வெறும் மகிழ்ச்சிக்காக ஆடப்படும் நடனம் அல்ல, சிந்திக்கவைக்கும் கருத்தும் கூட.
Subscribe to:
Posts (Atom)