நான் நமது நாட்டு தலைவரின் சுதந்திர தின பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் ஹிந்துப்பத்திரிகையில் தலைப்பு படித்தேன். லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தை சிறிது நிதானத்துடன் நடத்துவதற்கு வேண்டுகோள் போல தோன்றியது.
அதாவது, லஞ்சம் வேகமாக வாங்கலாம், நாடு துரிதமாக சீர் கெடலாம். ஆனால் அதை எதிர்த்து போராட்டம் மட்டும் நிதானமாக இருக்க வேண்டும். ஏன், இன்னும் இவருக்கு வர வேண்டியது வந்து சேரவில்லையா? இல்லை இப்படி சொல்லுமாறு அவர் மீது எதாவது வற்புறுத்தலா?
அதுவும் தான் இருக்கட்டும். இந்த அண்ணா ஹஜாரே அவர்கள் மீதும் தான் என்ன ஒரு நெஞ்சழுத்தத்துடன் நமது நாட்டு அரசு பழி சுமத்துகிறது? அதை எதிர்த்துப்பேசுபவர்கள் மீது ஏதோ நிறைய புகார்கள் ரெடியாக வைத்திருப்பாற்போல்!
இப்படி எங்குத்தான் எல்லாத்தையும் பரித்துச் செல்லப்போகிரார்களோ தெரியவில்லை. சில நாடுகளில் இப்படியெல்லாம் சேர்த்தால்தான் வாழ முடியும். நம் நாட்டில் இருக்கும் சுதந்திரத்திற்கு இது தேவையே இல்லையே? சிறிது இருந்தாலும் நன்றாகவே வாழலாமே? கொண்டு போய் வெளி நாட்டு வங்கிகளில் பூட்டி வைத்து என்ன சுகத்தை காண போகிறார்கள்?
வங்கியில் எவ்வளவு இருந்தாலும், மனதில் தாராளம் இல்லையே? குறுகிய மனிதர்களின் பொருளாதாரம் அவர்களுக்கு எப்பொழுதுமே நிம்மதியை கொடுக்காது.
No comments:
Post a Comment