மரம் தாவி .
நொடிக்கு ஒரு
வித்தை காட்டி
ஒரு நிமிடம் நேரே
மறு நிமிடம்
தலை கீழே சாய்த்து
இது குரங்கா, மனமா?
குரங்குபோல் மனமா?
ஒரு சிந்தனையில் இருந்து
மற்றொன்றிற்கு தாவி
பிடித்தவர்களிடம் குறை கண்டு
வேண்டாவதரிடம் தொற்றிக்கொண்டு
ஒரு நொடி
ஒன்றை சொல்லும்
அடுத்த நொடி
அதை பொய்யாக்கும்
மாருவதுகூட தெரியாமல்
நிஜம் என்று பொய்யை சாதிக்கும்
இந்த குரங்கை நம்பி
வாழ்க்கையை ஓட்டும்
மடங்கள் நாம்
வாக்களித்து
காப்பாற்ற தெரியாத
ஜடங்கள் நாம்
சரி எது தவறெது
என்று அறியாமல்
வாக்ஜாலங்களில் சிக்கி
மிரண்டு போராடி
மற்றவர்களை பழித்து
பிழைக்க முயலும் கோழை நாம்.
No comments:
Post a Comment