Thursday, October 6, 2011

Engum Iruppaan

நம் நாட்டில் பல விஷயங்கள் வருந்தத்தக்கவைதான். எனிலும் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் விஷயம் நாம் எதிலும் கடவுளைக்காண்பதுதான். மரம், செடி கோடி, மிருகம், யாதாயினும் அதை ஓர் கடவுளின் வாஹனாமாகவோ அல்லது கடவுளின் ஒரு வடிவமாகவோ நினைத்து அதற்க்கென்றொரு நாள் குறித்து அதை வழிபடுவது ஒரு விதத்தில் எல்லா உயிரினங்களிலும் அந்த கடவுள்  இருக்கிறான் என்பத நமக்கு உணர்த்துகின்றன. ஒரு மரத்தை வெட்டினால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதை ஈடு செய்யும்படி பத்து மரங்களை நடுவார்களாம்! இது நம்மூரில் மட்டும் இல்லை, பர்மாவில் கூட இந்த பழக்கம் இருந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.

ஏன் உயிர் ஜீவன்கள் மட்டும் இல்லாமல் நமக்கு உதவும் ஆயுதங்களுக்கு கூட மதிப்பு கொடுக்கும் ஒரு பண்டிகை! எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்வதற்கு உதவும் எதுவானாலும் அதற்கு இந்த நாளில் கும்புடு போட்டு அதை கடவுளாக தொழுகிறோம். வாயில்லை, பேச்சுமூச்சுக்கிடையாதென்றாலும் அதில்லாமல் நமக்கு ஏது வரும்படி? அதை நினைவில் வைத்து, அதிலும் கடவுளை காணும் மனப்பான்மை இருக்கும் நாட்டில் பிறந்திருக்கிறோம் என்பது பெருமையாகத்தான் இருக்கிறது!

ஆனால் என்ன, இந்த காலத்து மாடர்ன்/சயண்டிபிக் சிந்தனைகள் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன, ரொம்பவே சிந்திக்க வைத்து சில சின்ன சின்ன, அழகான விஷயங்களை கொச்சைப்படுத்துவது மற்றும் இல்லாமல் அதை தூக்கி எரிய வைக்கின்றன. ஆனால், அதனால் கஷ்டப்படுவதும் நாம்தான்! மாட்டில் கடவுள் இருக்கிறானா என்று கேட்பது தவறில்லை. ஆனால் அதையும் ஒரு கருவியாக உபயோகிப்பதுதான் தவறு. இடம் வேண்டும், அதனால் காட்டை அழித்து, உணவைத் தேடி வரும் மிருகங்களை அழித்து, இதில் என்ன பாவம் என்று வாதாடுவதுதான் தவறு.

இந்த சிந்தனை மாறி மறுபடியும் எல்லா ஜீவன் கருவிகள் எல்லாவற்றிற்கும் கொடுக்க வேண்டிய மரியாதை தந்தால் தான் நாமும் வளமுடன் வாழ முடியும். 

1 comment:

  1. இன்னும் நல்லா எழுதுங்க, வாழ்த்துக்கள்.

    ReplyDelete