Monday, December 19, 2011

சலனம்

வானம் - ஒரே நிறம்
ஒரு முனையில் இருந்து
கண் எட்டும் தூரம் வரை
ஆனால் இதோ!
மேகங்கள் உலவ!
வானத்திலும் ஒரே சஞ்சலம்!

காற்று - எங்கே?
குப்பென்று ஒரே வெப்பம்!
மெதுவாக, வீசிய காற்று!
பேய்ப்போல் ஆடுவதேன்!
தன்னுடன் சேர்ந்து
உலகத்தையும் ஆடவைக்கிறதே!

குளம் - நீர்,
அதிலும் அசைவு
காற்று வீச
சிறிய அலைகள்
ஆறாக மாறி
கடலில் சேர்ந்து
நிலவைப் பார்த்து
அலைகள் தாவி பறக்கனவே!

நெருப்பா?
ஆடாமல் இருக்குமா?
உணவைத்தேடி
பரந்து படர
காற்றுடன் விளையாடி
தீப்பொறி இங்கும் அங்கும்
குதித்து தன்னுள் கலக்கிறதே!

பூமி - நீ ஒன்றுதான்
சலனப்படாமல்
ஸ்திரமாக நிற்ப்பாயா?
இதென்ன ஆட்டம்?
ஐயோ பூகம்பம்!
நிற்ப்பதனைத்தையும்
சாய்த்தாயா  !

இப்படி பிரபஞ்சமே சலனப்பட
மனதென்னும் குரங்கு
எப்படி ஒரு நிலை பெற!
ஒவ்வொரு புதிய அனுபவத்திலும்
அலைப்போல எழுந்து விழ
இதற்க்கு ஏது  தடை!


1 comment:

  1. தமிழின் தாயே பிச்சை தா..
    உயிரின் பிச்சை நீயே தா
    தாயே பிச்சை தரவேண்டும்,
    உயிரின் பிச்சை தரவேண்டும்,

    நீரை நாங்கள் தரிகின்றோம்
    உயிரை நீங்கள் தரவேண்டும்
    அன்பால் அணையை உருவாக்கி,
    ஒன்றாய் சேர்ந்து வாழ்வோமே..

    ReplyDelete