Friday, September 23, 2011

முன்னிருப்பதில் ஆர்வம்

யார் சொன்னார்கள், இந்தியர்களுக்கு போட்டிநோக்கம் போதாதென்று! நமக்கு போட்டியிட வாய்ப்புகள் அவ்வளவு இல்லை. ஏனென்றால் போட்டிகள் வைப்பவர்களுக்கு பொறாமை நம்முடைய திறமையை பார்த்து. அதனால் தான் இந்திய ரோட்களில் வண்டியை ஓட்டுவது ஒரு போட்டியாக வைக்கவில்லை.

ஆரம்பகாலத்தில் இருந்தே நாம் இதற்குத்தான் பழகுகிறோம் - ரோட்டில் முந்திக்கொண்டு போவதற்கு.

பைக் - கிடைக்கும் காப்புகளில் புகுந்து, வேகமாக ஓடும் கார்களை தடுக்கிவிடுமாறு முன்னே வந்து அவர்களை பின்னாடி தள்ளுவதில் ஒரு சுகம் இருக்கே - ஆஹா!

கார் - எவனாவது முன்னாடி வந்தா, மவனே, ஹோர்ன் அடித்தே தூக்கி விடலாம். நமக்கு அந்த சாமர்த்தியம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறான் டிரைவர். வலதுபுறம் இடதுபுறம் என்று பாராமல் ஒரு சுமொவைக்கூட பைக் மாதிரி ஓட்டப்பழகியவன் அவன்.

ஆட்டோ - இது எந்த கட்சி என்று சொல்லவே முடியாது. நட்ட நாடு ரோட்டில் ஒட்டுவான். எந்த பக்கத்திலிருந்தும் முந்த முடியாது. ஆட்டோ ஸ்பீட் அதிகம் இல்லாதக்குறையை இப்படி நிறைவேற்றிக்கொள்ளும் - கொல்லும். என்னால் முடிய வில்லை என்றால் நீயும் முந்தக்கூடாது.

பஸ்/ட்ரக் - இரண்டும் வேறு வேறு தான், ஆனால் மனப்பான்மை ஒன்றே. நமக்கு அவசரம் என்ற பொழுது நமக்கு முன்னாள் சாவகாசியமாக ஓடும். நாம் அதற்க்கு முன்னாள் வந்தால் பயம் ஏற்படராப்போல் நம்மை வேகமாக போகச்செய்யும். இவர்களே நம் சாலைகளின் மன்னர்கள். அவர்களுக்கு எந்த விதமான விதிகளைப்பற்றியும் கவலையில்லை.

சைக்கிள் - பாவம் என்றும் சொல்லலாம், பாவி என்றும் சொல்லலாம். மொத்தத்தில் இவர்கள் உபத்ரவம் கொஞ்சநஞ்சம் இல்லை.
எல்லாம் எதற்கு? அந்த சிக்னல் மாறுமுன் போய் சேரத்தான். சிவப்பு விழுந்துவிட்டால், பச்சை வருவதற்கு முன் அவர்களால்தான் பறக்க முடியும். அவர்களுக்குத்தான் அவசரம், அவர்களால்தான் சாமர்த்தியமாக ஓட்ட முடியும்.

நாம் பொருள் செய்வதில் முதலாக இல்லாமல் இருக்கலாம், தரத்தில் ஏனோ தானோ என்று இருக்கலாம். எங்கேயும் சொன்ன நேரத்தில் போய் சேராமல் இருப்பது ஒரு பெருமைக்குரிய வஷயம். ஆனால், ரோட்டில் போகும் அவசரத்தைப்பார்தாலோ, எங்கேயோ தலை போற காரியம் என்றுத்தோனச்செய்யும்.

இப்படிப்பட்டத்திரமையை காட்டிக்கொள்ள உலகளவில் நமக்கு ஒரு வாய்ப்பு இல்லாதது...மிகவும் வருந்தத்தக்கது.

No comments:

Post a Comment