கும் இருட்டு
கருவில் இருப்பது போல்
அதே சுகம்
எதுவும் நம்மை தீண்டாது
என்ற நம்பிக்கை
அந்தரங்கத்தில் மிதப்பது
உடலே இல்லாதது போல்
பஞ்சைப்போல் லேசாக
இப்படி மிதப்பது
சாத்தியமா!
அட, உடலே இல்லை!
பரந்த வெளியில்
பறவைப் போல் பறப்பது
நானா, அல்ல
ஒரு இனிய கனவா?
இல்லையே!
அதோ கீழே!
சடலம் ஒன்று, அதைச்சுற்றி
அழுபவர் யார்?
தெரிந்தவர்களா?
உடலை விட்டு
பிரிந்த உயிர்! இந்த உலகை
ஒருமுறை சுற்றி
தன் இருப்பிடத்தை தேடி
கலக்கும் ஆவல்!
தெரிந்தவர், தெரியாதவர்
யாராயினிலும்
தேவை இல்லை இனி
அந்த ஜோதி
அதோ! அழைக்கிறது!
வந்தேன், கலந்தேன்
நான் நானாக இல்லை
ஒரு மின்னல்
ஒரே வெளிச்சம்
ஐய்க்க்யமாகிய நாம்!
No comments:
Post a Comment