Tuesday, September 20, 2011

இதில் நான் யார் - Which is me?

பழுத்த பழம் ஒன்று மரத்தில் கண்டேன்.
கை துருதுருத்தது அதைப்பரிக்க
நில் என்று ஒரு குரல் தடுத்தது
யார் என்று திரும்பிப்பார்த்தேன்.
நான்தான் என்றது அது என்னுள்ளிலிருந்து.
அட நீ வேற! தவறான சமயத்திலே வந்து
என்றது மற்ற்றொரு குரல், என்னுள்தான்!
ஒன்று வென்று மற்றொன்று அடங்கியது

தராசைப்போல என்னை ஆட்டிவைக்கும்
இப்படியும் அப்படியும் மாறச்செய்யும்
எது வெல்லும் என்று சொல்லமுடியாத 
நல்லது கெட்டதென்று பிரிக்கமுடியாத 
சில நேரங்களில் ஒன்று இல்லை
பல குரல்கள் என்னுள் கேட்கும்.
அந்த நிமிடம் எதற்கு பலம் அதிகமோ
அதுவே ஓங்கி நிற்கும்

ஆனால் அதற்க்கு பலம் கொடுப்பது யார்?
எல்லா குரலுமே என்னுடையதுதானே!
இதை செய், அதை விடு, வேறொன்றும் இருக்கிறதே
என்று சுட்டிக்காட்ட பல குரல்கள்
இதில் நான் யார்? எதை என்னுடையதென்பது?
எந்தப்பக்கம் சாய்வேன் என்று நானே அறியாமல்
நிற்கும் பொழுது தோன்றும், இதில் நான் யார்?




No comments:

Post a Comment