சமீபத்தில் ஒரு புத்தகம் திருத்திக்கொண்டிருந்தேன். ஜப்பானில் தயாரிக்கப்படும் போருட்கள் என்றாலே ஒரு காலத்தில் தரம் இல்லை என்று பொருள். இன்று நமக்கு தெரியும், ஜப்பானின் கதை. தொழிலில் வழிகாட்டியாகி இருக்கிறார்கள்.
இரண்டு நாள் முன்னே ஒரு மெயில் வந்தது. சீனாவில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் அப்படியே சாய்ந்துவிட்ட ஒரு படம் அது. நம் நாட்டுலே சீனப்பொருள்கள் வந்த புதிதில் மலிவு விலை என்பதால் ஆர்வத்தை உண்டாக்கினர். ஆனால் அவை தரம் குறைந்தது மட்டும் இல்லாமல் அபாயகரமா என்ற அச்சத்தையும் உண்டாக்கின. இந்த படத்தைப்பார்க்கும் பொழுது, நல்ல வேளை சென்னையை சுற்றி இன்னும் வீடு கட்ட இடமிருக்கிறது என்ற நிம்மதி உண்டாகியது.
ஆனால் அது கூடவே ஜப்பானைப்போல அவர்களும் தரத்தில் உயர்ந்து வருவதற்கு தடை ஏதும் இல்லை என்று தோணியது. நாம் நடுவாந்தரமாக இருந்து விடுவோமோ என்ற கவலையும் உண்டாகிறது. ஊழல் பிடித்த இந்த நாட்டை திருத்தவில்லை என்றால் நம் நாடே சாய்வதற்கு நேரம் எடுக்கதல்லவா?
No comments:
Post a Comment