தாய்மை என்றாலே தயக்கங்கள் தான். நாம் எடுத்த முடிவு சரியா? நாம் சொல்லும் அறிவுரை சரியா? நாம் கோவிப்பது சரியா? நாம் விட்டுக்கொடுப்பது சரியா?
தீவாளி அன்று என் தோழியின் ஒரு போட்டோ பார்த்தேன். அவள் செய்த இனிப்பு கார பண்டங்களை படம் பிடித்திருந்தாள். இந்த வருடம் நான் எதையுமே செய்திருக்கவில்லை. என் குழந்தைகள் தீவாளி நாட்களை நினைவு படுத்தும் பொழுது என்ன சொல்வார்கள். "கிராண்ட் ஸ்வீட்ஸ் மிக்சர் ஞாபகம் இருக்கா?" என்று தானே பேசிக்கொள்வார்கள்? நான் பெருமையாக சொல்லுகிறேனே "எங்க அம்மா செய்யும் மிக்சர்" என்று, அந்த மாதிரி அவர்களுக்கு ஒன்றுமே நினைவு வராதே?
ஆனால் தோழி பதில் சொன்னது என்னை நெகிழ வைத்தது. "அவர்கள் சொல்வார்கள் என் தாய் புத்தகங்கள் எழுதினாள்" என்று. மிக்சர் ஜாங்கிரிக்கு ஈடு இல்லை என்றாலும் அவர்களும் பெருமை படும்படி நாம் எதோ செய்கிறோம் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் சில நேரங்களில் நமக்கு நினைவு வரும் போல. ஆனால் கூடவே இந்த சந்தேகமும் கிளம்பியது - காபி டேபிள் பூக்சை எழுதுவதை விட இனிப்பு செய்து கொடுத்தால் இன்னும் அவர்கள் நினைவில் நிக்குமோ என்னவோ?
No comments:
Post a Comment