கனவில் மிதக்க மென்மையான மெத்தை
அதோ தூரத்தில் மிதக்கும் மேகங்கள்
வெள்ளை பஞ்சுபோல் மிதமான அவை
தூண்டும் என் மனதில் எத்தனை கனவுகள்
ஒரு நாள், ஒரே ஒரு நாள் அதில் படுக்க
ஒரு பொழுதாவது நிம்மதியாக அதில் உலாவி
இந்திரலோகமோ, கனவுலகமோ, அதில் மிதக்க
சோம்பியும், உருண்டும், புரண்டும், உலகளாவி
வானத்திலிருந்து கீழே உலகைப் பார்க்க
அங்கு நடப்பதைக் கற்பனைச் செய்ய
பறவைப்போல் சுதந்திரமாக பறக்க
வடிவங்களுக்கு சிந்தனையால் வர்ணம் பூச
இந்த கனவுகள் நிஜமாவதற்கு
ஆஹா வந்ததே அந்த விமானம்
ஆனால் மேகத்தின் நடுவே பறப்பதற்கு
வேண்டுமே தனி மனோதைரியம்
மேலும் கீழும் ஆட்டிவைக்கும்
கனவுகளெல்லாம் சிதறிப்போகும்
பனிமூட்டம் கண்ணை மறைக்கும்
நிலத்தை இரு கண்கள் ஆவலுடன் தேடும்
என்னத்தான் கனவைப்போல மிதந்தாலும்
அந்த பொல்லாத மேகம் இடியைத் தாங்கும்
வெறும் பனித்துளிகளாக இருந்தாலும்
பாறையின் பலத்திற்கு அது ஈடாகும்
இருக்குமிடத்திலேயே கனவு காண்
மாயை இந்த உலகம் என்று புரிந்துகொள்
அதோ தூரத்தில் மிதக்கும் மேகங்கள்
வெள்ளை பஞ்சுபோல் மிதமான அவை
தூண்டும் என் மனதில் எத்தனை கனவுகள்
ஒரு நாள், ஒரே ஒரு நாள் அதில் படுக்க
ஒரு பொழுதாவது நிம்மதியாக அதில் உலாவி
இந்திரலோகமோ, கனவுலகமோ, அதில் மிதக்க
சோம்பியும், உருண்டும், புரண்டும், உலகளாவி
வானத்திலிருந்து கீழே உலகைப் பார்க்க
அங்கு நடப்பதைக் கற்பனைச் செய்ய
பறவைப்போல் சுதந்திரமாக பறக்க
வடிவங்களுக்கு சிந்தனையால் வர்ணம் பூச
இந்த கனவுகள் நிஜமாவதற்கு
ஆஹா வந்ததே அந்த விமானம்
ஆனால் மேகத்தின் நடுவே பறப்பதற்கு
வேண்டுமே தனி மனோதைரியம்
மேலும் கீழும் ஆட்டிவைக்கும்
கனவுகளெல்லாம் சிதறிப்போகும்
பனிமூட்டம் கண்ணை மறைக்கும்
நிலத்தை இரு கண்கள் ஆவலுடன் தேடும்
என்னத்தான் கனவைப்போல மிதந்தாலும்
அந்த பொல்லாத மேகம் இடியைத் தாங்கும்
வெறும் பனித்துளிகளாக இருந்தாலும்
பாறையின் பலத்திற்கு அது ஈடாகும்
இருக்குமிடத்திலேயே கனவு காண்
மாயை இந்த உலகம் என்று புரிந்துகொள்
மனது பறந்தாலும் நிலைத்து நில்
எதிலும் அளவோடு நடந்துகொள்.