Friday, September 30, 2011

Mithappil oru sthiram


நூறு கனவுகள் கண்டாலே, ஆறு கனவுகள் பலிக்காதா - ஒரு தமிழ் பாட்டுல வரும்.

இந்த நிமிஷம் வாழ்க்கையே கனவுல மிதப்பது போல இருக்கு.

ஒரு பக்கம் ஜலதோசத்துக்கு எடுத்துண்ட மருந்துகள் எங்கையோ மெதக்கரா மாதிரி இருக்கு! இன்னொரு பக்கம் நான் எழுதின ஒரு புஸ்தகம் பிரசுரம் ஆயிருக்குன்னு நினைக்கரச்சே ஒரே சந்தோசத்துல மிதக்கரா மாதிரி இருக்கு.

சும்மா பூமில கடன்னு சொல்ற மாதிரி ஒரு இடுப்பு வலி எல்லா மெதப்புக்கும் முற்றுக்கட்டை போட்டிருச்சு!

இதுதான் வாழ்க்கைப்போல இருக்கு. இறக்கையும் கொடுத்து கால்ல கல்லையும் கட்டி நல்லது கெட்டதுக்கு நடுல விழாம நடக்கறதுதான் திறமை, புத்திசாலித்தனமும் கூட!

Wednesday, September 28, 2011

Lasting Impressions: Dream Come True

Lasting Impressions: Dream Come True: Prabhat was excited about his promotion. He had worked hard for it, he had worked hard for the job in fact. And now he was a senior manager....

Saturday, September 24, 2011

திறமைக்கு ஒரு சவால்

நேற்று ஒன்று கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்தவரின் மகன் கூடைபந்து கால்பந்து விளையாட்டுகளில் மிக ருசி வைப்பவன். சிறு வயதிலிருந்தே இந்த பந்தயங்களில் பங்கு பெற்றவன். கல்லூரியில் படிக்கிறான் இப்பொழுது. அவர் தந்தை அவனுக்காக மாநில அளவில் குழுவில் சேர்வதற்கு தேர்வில் பங்கும் ஏற்று நாலறைலக்ஷமும் கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் தேர்வில் பங்கேற்காமலேயே சிலர் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்!

என்னுடைய வியப்பை தெரிவித்து எப்படி எல்லா இடங்களிலும் ஊழல் பரவி இருக்கிறது என்று சொல்லும் பொழுது அவர் சொன்னார் - அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், பெண் மருத்துவப்பட்டிப்பிர்க்கு நாற்பது லக்ஷம்  கட்டியிருக்கார்களாம்! 

அப்படியாவது அந்த படிப்பு வேண்டுமா என்றாகி விட்டது. இப்படி பணத்தைக்கட்டி வரும் மருத்துவர்களை நம்பலாமா? இவர்களும் தான் கட்டிய முதலை வசூல் செய்வதில் தானே குறியாக இருப்பார்கள்? அதுவும் சொன்னார், இந்த உறவினர். ஒரு மருத்துவர் அவர் இடம் வருத்தப்பட்டுக்கொண்டாராம் - அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு வேண்டுமென்றால் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிலிருந்து எல்லாருக்கும் பணம் தரவேண்டுமாம்!

இதற்கு யாரை பழிப்பது? நாமே நம் தலையில் மண்ணை வாரிக்கொள்கிறோம் - கொல்கிறோம், நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ. வாழ்க்கை தரம் தேறி விட்டதென்பது ஒரு சிலருக்குத்தான். மற்றவர்களுக்கும் அந்த நிலை அடையவேண்டும் என்ற ஆர்வத்தில் எப்படி வேண்டுமானாலும் அந்த பணத்தை சம்பாதித்துவிடவேண்டும் என்ற நோக்கம் அதிகரிக்கும் இந்த நாளில் வேற எதை எதிர்பார்க்க முடியும்? நாள்ல நிலையில் இருப்பவர்களுக்கோ எவ்வளவு இருந்தாலும் போராதுப்போல! 

ஊழல் ஒழிய நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்? எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டும் என்ற வெறி நம் வேலையில் தெரிய வேண்டும் என்பது ஒரு காலம். இன்று திறமை பேசவில்லை, பணம் தான் பேசுகிறது.


Lasting Impressions: The Fruit of 25 Years

Lasting Impressions: The Fruit of 25 Years: I graduated from comics to books very late. I probably hadn't started reading Enid Blytons till I was in the fifth. And then I had two class...

Friday, September 23, 2011

முன்னிருப்பதில் ஆர்வம்

யார் சொன்னார்கள், இந்தியர்களுக்கு போட்டிநோக்கம் போதாதென்று! நமக்கு போட்டியிட வாய்ப்புகள் அவ்வளவு இல்லை. ஏனென்றால் போட்டிகள் வைப்பவர்களுக்கு பொறாமை நம்முடைய திறமையை பார்த்து. அதனால் தான் இந்திய ரோட்களில் வண்டியை ஓட்டுவது ஒரு போட்டியாக வைக்கவில்லை.

ஆரம்பகாலத்தில் இருந்தே நாம் இதற்குத்தான் பழகுகிறோம் - ரோட்டில் முந்திக்கொண்டு போவதற்கு.

பைக் - கிடைக்கும் காப்புகளில் புகுந்து, வேகமாக ஓடும் கார்களை தடுக்கிவிடுமாறு முன்னே வந்து அவர்களை பின்னாடி தள்ளுவதில் ஒரு சுகம் இருக்கே - ஆஹா!

கார் - எவனாவது முன்னாடி வந்தா, மவனே, ஹோர்ன் அடித்தே தூக்கி விடலாம். நமக்கு அந்த சாமர்த்தியம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறான் டிரைவர். வலதுபுறம் இடதுபுறம் என்று பாராமல் ஒரு சுமொவைக்கூட பைக் மாதிரி ஓட்டப்பழகியவன் அவன்.

ஆட்டோ - இது எந்த கட்சி என்று சொல்லவே முடியாது. நட்ட நாடு ரோட்டில் ஒட்டுவான். எந்த பக்கத்திலிருந்தும் முந்த முடியாது. ஆட்டோ ஸ்பீட் அதிகம் இல்லாதக்குறையை இப்படி நிறைவேற்றிக்கொள்ளும் - கொல்லும். என்னால் முடிய வில்லை என்றால் நீயும் முந்தக்கூடாது.

பஸ்/ட்ரக் - இரண்டும் வேறு வேறு தான், ஆனால் மனப்பான்மை ஒன்றே. நமக்கு அவசரம் என்ற பொழுது நமக்கு முன்னாள் சாவகாசியமாக ஓடும். நாம் அதற்க்கு முன்னாள் வந்தால் பயம் ஏற்படராப்போல் நம்மை வேகமாக போகச்செய்யும். இவர்களே நம் சாலைகளின் மன்னர்கள். அவர்களுக்கு எந்த விதமான விதிகளைப்பற்றியும் கவலையில்லை.

சைக்கிள் - பாவம் என்றும் சொல்லலாம், பாவி என்றும் சொல்லலாம். மொத்தத்தில் இவர்கள் உபத்ரவம் கொஞ்சநஞ்சம் இல்லை.
எல்லாம் எதற்கு? அந்த சிக்னல் மாறுமுன் போய் சேரத்தான். சிவப்பு விழுந்துவிட்டால், பச்சை வருவதற்கு முன் அவர்களால்தான் பறக்க முடியும். அவர்களுக்குத்தான் அவசரம், அவர்களால்தான் சாமர்த்தியமாக ஓட்ட முடியும்.

நாம் பொருள் செய்வதில் முதலாக இல்லாமல் இருக்கலாம், தரத்தில் ஏனோ தானோ என்று இருக்கலாம். எங்கேயும் சொன்ன நேரத்தில் போய் சேராமல் இருப்பது ஒரு பெருமைக்குரிய வஷயம். ஆனால், ரோட்டில் போகும் அவசரத்தைப்பார்தாலோ, எங்கேயோ தலை போற காரியம் என்றுத்தோனச்செய்யும்.

இப்படிப்பட்டத்திரமையை காட்டிக்கொள்ள உலகளவில் நமக்கு ஒரு வாய்ப்பு இல்லாதது...மிகவும் வருந்தத்தக்கது.

Thursday, September 22, 2011

Lasting Impressions: Elves

Lasting Impressions: Elves: When I see the trees Lush, rich and green Looking washed and clean After rains heavy I feel like becoming small Climbing the trees tal...

Tuesday, September 20, 2011

இதில் நான் யார் - Which is me?

பழுத்த பழம் ஒன்று மரத்தில் கண்டேன்.
கை துருதுருத்தது அதைப்பரிக்க
நில் என்று ஒரு குரல் தடுத்தது
யார் என்று திரும்பிப்பார்த்தேன்.
நான்தான் என்றது அது என்னுள்ளிலிருந்து.
அட நீ வேற! தவறான சமயத்திலே வந்து
என்றது மற்ற்றொரு குரல், என்னுள்தான்!
ஒன்று வென்று மற்றொன்று அடங்கியது

தராசைப்போல என்னை ஆட்டிவைக்கும்
இப்படியும் அப்படியும் மாறச்செய்யும்
எது வெல்லும் என்று சொல்லமுடியாத 
நல்லது கெட்டதென்று பிரிக்கமுடியாத 
சில நேரங்களில் ஒன்று இல்லை
பல குரல்கள் என்னுள் கேட்கும்.
அந்த நிமிடம் எதற்கு பலம் அதிகமோ
அதுவே ஓங்கி நிற்கும்

ஆனால் அதற்க்கு பலம் கொடுப்பது யார்?
எல்லா குரலுமே என்னுடையதுதானே!
இதை செய், அதை விடு, வேறொன்றும் இருக்கிறதே
என்று சுட்டிக்காட்ட பல குரல்கள்
இதில் நான் யார்? எதை என்னுடையதென்பது?
எந்தப்பக்கம் சாய்வேன் என்று நானே அறியாமல்
நிற்கும் பொழுது தோன்றும், இதில் நான் யார்?




Thursday, September 15, 2011

Kaathal - Love

உன் அழகிய கண்ணிலா?
கூர் நாசி அழகிலா?
புன்னகை தவழும் இதழிலா?
இந்த மயக்கும் மனதிலா?

அழகு மட்டும் போதுமோ?
காதல் என்றும் நீடுமோ?
வயது ஏறி கூடுமோ?
கூடு கலைந்து போகுமோ?

முகத்தில் இருந்து
அகத்தைக்கண்டு
வெளியிலிருந்து
உள்ளே புகுந்து

மங்கும் பார்வை
குறையும் வலிமை 
சுருங்கும் தோல்
குனிந்த தோள்

கண்டும் காணாமல்
தெரிவதெல்லாம்
சுகமும் துக்கமும்
பகிர்ந்ததென்று

வயது கூடி இருந்தும் கூட
கூடியிருக்க வலியுறுத்தும்
நம் இருவருள் வளர்ந்து
இடையில் நிற்கும் முதிர்ந்த காதல்

Wednesday, September 14, 2011

Lasting Impressions: Golden Shower

Lasting Impressions: Golden Shower: The shower Golden and bright Making me feel Blessed and bright Sometimes hidden By darkness of mind When blessings seem Banes in gui...

Tuesday, September 13, 2011

Payanam - The Journey

கும் இருட்டு
கருவில் இருப்பது போல்
அதே சுகம்
எதுவும் நம்மை தீண்டாது
என்ற நம்பிக்கை

அந்தரங்கத்தில் மிதப்பது
உடலே இல்லாதது போல்
பஞ்சைப்போல் லேசாக
இப்படி மிதப்பது
சாத்தியமா!

அட, உடலே இல்லை!
பரந்த வெளியில் 
பறவைப் போல் பறப்பது
நானா, அல்ல
ஒரு இனிய கனவா?

இல்லையே! 
அதோ கீழே!

சடலம் ஒன்று, அதைச்சுற்றி
அழுபவர் யார்?
தெரிந்தவர்களா?

உடலை விட்டு
பிரிந்த உயிர்! இந்த உலகை
ஒருமுறை சுற்றி
தன் இருப்பிடத்தை தேடி
கலக்கும் ஆவல்!

தெரிந்தவர், தெரியாதவர்
யாராயினிலும்
தேவை இல்லை இனி
அந்த ஜோதி
அதோ! அழைக்கிறது!

வந்தேன், கலந்தேன்
நான் நானாக இல்லை
ஒரு மின்னல்
ஒரே வெளிச்சம்
ஐய்க்க்யமாகிய நாம்! 

Monday, September 12, 2011

Lasting Impressions: We Are Our Parents

Lasting Impressions: We Are Our Parents: I stand in the kitchen, shouting at my son. "You know the veggies make you grow tall and strong. How can you make me say it to you everyday!...

Sunday, September 11, 2011

Jokesum Feedbackum

ஒரு புத்தகம் படித்தேன் - பீட்பாக் (feedback) பற்றி. எப்படி ஒருத்தரைப்பற்றி கருத்துக்கொடுக்க வேண்டும், அதை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதில் ஒரு ஆராய்ச்சியைப்பற்றியும் படித்தேன் - ஆண்களும் பெண்களும் கருத்துக்கொடுப்பதிலும் வாங்குவதிலும் எப்படி வேறுபடுகிறார்கள் என்று.

அந்த ஆராய்ச்சியின் படி, ஆண்கள் தோல்வியுற்றால் வேறு காரணங்களை அதற்க்கு பொறுப்பாக்கிறார்கள். பெண்களோ, தன்னையே அந்த தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறார்கள்.

இப்பொழுதுதான் புரிகிறது, ஏன் எல்லா கணவன் மனைவி ஜோக்குகளும் மனைவியையே பழிக்கின்றன என்று! அவைகள் எழுதப்பட்டது ஆண்களால் தானே!

Friday, September 9, 2011

Lasting Impressions: Paranormal

Lasting Impressions: Paranormal: Energy balls, ghost, spirits... they don't always feature in my conversations, but sometimes they are fascinating topics. There are people w...

Thursday, September 8, 2011

Nizhal

நேற்று ஒரு நடுத்தர வயதான தம்பதியரை சந்திக்கச்சென்றிருந்தேன். அவர்களுடன் பெசிக்கொண்டிருந்தப்போழுது சில பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்துக்கொண்டார்கள். அது அவர்களுக்கு சங்கடமான நினைவுகள் என்று புரிந்துக்கொண்டேன். ஆனால் அந்த விஷயத்தை அவர்களிடம் பேச வேண்டிய கட்டாயம். அதை அவர்கள் பேசி முடித்தபிறகு, மற்ற விஷயங்களை பேசும்பொழுது, அந்த அறையில் ஒரு மாற்றம்!

நாங்கள் பேசிக்கொண்டிருந்தது கணவனின் அண்ணன் பையனைப்பற்றி. அந்த பையன் இறந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் அவனுடைய பகைமை சுபாவத்தினால் குடும்பத்தில் பல பிரச்னைகள். இவர்கள் மனதில் அந்த ஆதங்கம் இன்னும் ஆழமாகவே இருந்தது. அதனாலையோ என்னவோ அவனைப்பற்றிப் பேசும் பொழுது அந்த அறையே இருண்டதுபோல இருந்தது. அதை நான் அப்பொழுது கவனிக்கவில்லை. இந்த விஷயத்தை முடித்து சுமுகமாக பேசிக்கொண்டிருந்தப்பொழுது ஒரு நிழல் நகர்ந்தது போல வெளிச்சம்!

இதுமாதிரி எனக்கு இதற்க்கு முன்னால் நடந்ததே இல்லை. ஆனால் யாரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமோ, அவனைப்போல ஆளைப்பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை. நம்மை சுற்றி ஆத்மாக்கள் இருக்கின்றன என்கிறார்களே! அவனுக்கு தெரிந்திருக்குமோ, அவனைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று?

Tuesday, September 6, 2011

Lasting Impressions: The Mind Filter

Lasting Impressions: The Mind Filter: It is strange, The mind, How it filters out the unpleasant. Remembering only all that is best. The past, when it was the present D...

Monday, September 5, 2011

Agatthin Azhagu

அவன் நடந்து வரும்பொழுதே ஒரு தனி கம்பீரம் தெரிந்தது. தன்னையும் அறியாமல் அவள் மனம் அவனிடம் ஈர்ந்தது. காட்டிக்கொள்ள கூடாதென்று அவள் தன் குரலை கடுமையாக்கிக்கொண்டு, "யார் வேண்டும் உங்களுக்கு?" என்று கேட்டாள்.

"நீங்கள்தான்," என்றான் அவன் மென்மையாக. 

முகம் சிவந்து, வெட்கத்தில் தலை குனிந்தாள். "என்ன!" என்று தயங்கினாள்.

"நீங்கள் தாமரை தானே? உங்களைத்தான் பார்க்க வந்தேன்," என்றதும் சட்டென நிமிர்ந்தாள்.

"ஓ! என்ன வேலை?" என்றாள், தன்னை சுதாரித்துக்கொண்டு.

அவன் வந்தவேலையைச்சொன்னான். அவள் விரைவாக அதை முடித்துக்கொடுத்தாள். அவன் பெயர் ஆதித்யா என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவள் வேலையை கவனித்தவாறே பேசிக்கொண்டிருந்தான். அவளை சிரிக்க வைத்தான். அவளுக்கு அவன்மேல் இருந்த ஈர்ப்பு அதிகரித்தது. அவன் கிளம்பும்பொழுது தன்னுடைய செல் நம்பரை கொடுத்தாள். ஒரு வாரத்தில் இருவரும் கல்யாண பேச்சிற்கே வந்து விட்டனர். அவளுடைய குடும்பம் அவனை பார்த்து அகமகிழ்ந்தனர். "இப்படி ஒரு பையனை நாங்களே தேடியிருந்தாலும் அமைந்திருக்காது," என்று பூரித்தனர்.

கல்யாணமான ஒரு மாதத்திலேயே அவளுக்கு புரிந்து விட்டது, தான் ஏமாந்து போனது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இவனுடைய அழகு அவனுடைய அழகிய அகத்தை காட்டுகிறது என்றுஅவள் நினைத்தது தவறு. அவன் ஒரு மிருகம் என்று போகபோகதான் தெரிய வந்தது. ஆனால் அதை தன் வீட்டினரிடம் இருந்து அவள் மறைத்தாள். அவனிடம் பயம் ஒரு பக்கம், மற்றவர்கள் தன்னை நம்பமாட்டர்களோ என்ற தயக்கம் மறுபுறம். சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை ஒரு புறம். ஆனால் அவளுடைய அழகிய முகம் வாட வாட, அவனுடைய வெறியும் அதிகரித்தது.

ஒரு நாள், அவன் அந்த பாட்டில் கொண்டு வந்த பொழுது, அவள் கவனிக்கவில்லை. அவன் ஏற்கனவே எதோ சதி நோக்கத்துடன் தான் வந்திருக்கிறான் என்று மற்றும் புரிந்தது. அது என்னவென்று அவள் முகம் எரியும் பொழுது யோசிக்க கூட முடியவில்லை. அவன் ஆசிட்டை அவள் முகத்தில் எறிந்தப்போழுது, "போய் ஒழி" என்று சொன்ன வார்த்தைகள் மட்டும் ரீங்காரமாக ஓலித்தது.

இப்படி வாழ்வதற்கு பதில் போய் ஒழிந்திருக்கலாம். அவள் நேரம், உயிர் பிழைத்தது. முகம் பொசுங்கியது.

இன்று அவன் மறுமணமாம். பார்க்க லக்ஷணமாக இருக்கிறான் என்றுப்பேசிக் கொள்வார்களோ? சிரிப்புதான் வருகிறது. முகம் அழகாக இருந்ததால் மனதில் இருக்கும் மிருகம் யார் கண்ணிலும் தெரியவில்லை. அவனுடைய அசிங்கமெல்லாம் என் முகத்தில் வீசிஎறிந்து விட்டு, இதை மிருகமுகமாக்கி அவன் தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொண்டுவிட்டான்! 

ஆனால் மற்றவர்கள் அவனால் பாதிக்கப்பட்ட என்னைப்பார்த்துத்தானே  பயன்தோடுகிரார்கள்!

Saturday, September 3, 2011

Lasting Impressions: Throwing Baby with the Bathwater

Lasting Impressions: Throwing Baby with the Bathwater: A year ago, when I was doing the book on Tiruvannamalai, I met weavers from Aarani, a place famous for silk. The chief weaver's wife proudly...

Thursday, September 1, 2011

சுயகௌரவம்

"என்னால் இன்னிக்கு உன்ன ஆபீஸ்ல விட முடியாது," ரவி சொன்னான்.

"ஏன்?" மாலதி கேட்டாள்.

"மீட்டிங் இருக்கிறது, நுங்கம்பாக்கத்தில்," என்றான். "உங்க அண்ணாவைப்  பிக் அப் பண்ணிக்கச்சொல்லு."

"அதைப் பற்றி  உங்களுக்கென்ன?" என்று நக்கலாகக் கேட்டாள். அடுத்து என்ன வரப்போகிறது என்று நன்றாகத் தெரியும் அவளுக்கு.

"ஏன்? கொஞ்சம் தங்கைக்காக சிரமப்படக்கூடாதோ?" வார்த்தைகளால் இடித்தான். 

"ஏன் நான் ஒரு நாள் ஆடோல போகக்கூடாதோ?" என்று பதிலளித்தாள்.

"இல்லை, கார் தான் வாங்கிகொடுக்கல..."

"என் புருஷன் நன்கு சம்பாதிக்கும் போது, அவன் எதுக்கு வாங்கித் தரணம்?" என்று அவளும் விடவில்லை.

"தங்கைக்குச் சௌகரியமாக இருக்கும்னு ஒரு அண்ணனுக்கு தோணாதா?" என்றான் அவன்.

"நீங்களும் உங்க தங்கையும் தான் இருக்கீங்களே, பாச மலர்கள்! அதே கஷ்டம் எங்கண்ணனுக்கு என்னால் வர நான் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன்."

"நம்ப பாடுதான்பா பெரும்பாடு," என்று முணுமுணுத்தான். அவளும் ஒரு புன்முருவலோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

**

"வினயாக்கு கிப்ட்  வாங்கணும்," என்று ரவி சொல்லும்பொழுதே வயிற்றைக் கலக்கியது. போன வருடம் அவர்களுடைய பத்தாவது கல்யாண நாளிற்கு வினயா மறைமுகமாக கார் கேட்டிருந்தாள். "நீங்கள் இருவரும் சம்பாதிக்கறீங்க. எங்க மாமியார் வீட்ல எனக்கு எவ்வளவு கௌரவத்தைச் சேர்க்கும்," என்று அவள் பூரிக்கும் பொழுது, அவளுடைய தாயும், "என்னடி, ஒரே தங்கை... ரவி சும்மா விடுவானா! பார் நீ, அவன் நீ ஜம்முன்னு போய் வர கார் வாங்கறானா இல்லையான்னு பார்," என்று வேறு பெருமைப் பட்டாள்.

மாலதி தனக்கு கார் வாங்கலாம் என்ற எண்ணத்தை வேரோடு அழித்தாள்.

வாங்கிக் கொடுத்த கார் கடனும் தீர்ந்த பாடில்லை, வினயாவின்  குறையும் இன்னும் தளர வில்லை. "என்ன அண்ணா, மாருதி சுசுகியா! i10 வாங்கித் தருவேன்னு நெனச்சேன்," என்று அவள் சொல்லும்பொழுது என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று ஆகி விட்டது மாலதிக்கு.

அது வரைக்கும்  அவளும் அண்ணனிடம் எதையாவது எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். பட்டுப் புடவை, நகை, குழந்தைகளுக்கு என்று.

ஆனால், வினயாவைப் பார்த்தபிறகு, அவளுக்கு தன் மேலேயே சீ என்றாகிவிட்டது. ரவியும் அவளும் நன்றாக சம்பாதித்தும் பிறந்த வீட்டிலிருந்து எதையாவது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கேவலம் என்று புரிந்தது. தன்னால் முடிந்தால் சரி, இல்லையென்றால் எந்த பொருளுமே வேண்டாம், என்று அன்று தீர்மானித்ததுதான். ரவியும் அவன் தாயும் எவ்வளவு இடித்துப் பேசினாலும் சரி, அவள் சுயகௌரவத்தினால் தலை நிமிர்ந்தே நடந்தாள். 

எதிர்பாராததால் அண்ணன் சந்தோஷமாகத் தரும் நூறு ரூபாய் கூட உயர்ந்ததாகத் தோன்றியது.







Lasting Impressions: A Humane Cop Tale

Lasting Impressions: A Humane Cop Tale: I have been off thrillers for a while. They are nearly as fantastic as fantasy tales. The "never-make-a-mistake-except-to-take-story-forwar...