Sunday, October 21, 2018

அன்பின் ராகம்

மூங்கில் ஒரு குழலாக
குழலிலிருந்து உன் இசையாக
உன் இசை இதயங்களில் குடிபோக
உன் இதழ்கள் என்னை உயிர்ப்பிக்க

Saturday, September 8, 2018

உறவுகள் ஜாக்கிரதை - 2

முதல் பாகம் படிக்க 

சஞ்சீவ் இனிப்புடன் வந்தான்.

"என்ன, வேற வேலை கடைச்சிடுத்தா?" என்று ராதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்.

Sunday, September 2, 2018

உறவுகள் ஜாக்கிரதை - 1

"என்ன அதிசயம்? இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பறீங்க?" சஞ்சீவ் ராதாவைப் பார்த்து கேட்டான். "ஆஃபீஸ்ல   விளக்க யாரு அணைக்கறது!?"

ராதா சிரித்தாள். "இந்த கிண்டல் தானே வேண்டாங்கறது! என்னவோ நான் மட்டும் லேட்டா வேலை செய்யற மாதிரியும், நீங்க எல்லாம் சரியா கிளம்பற  மாதிரியும்!"

Sunday, June 17, 2018

வரம்புகள்

"டேபிளை ஒழிச்சிடு," என்று நாகலட்சுமி தன் மகள் ராதாவிடம் கூறும்பொழுது, மகன் கிட்டாவும் தொடர்ந்தான். நாகலட்சுமியின் தங்கை வனஜா தன் மகள் காமினிக்கு சைகை செய்தாள், "நீயும் ஒத்தாசை செய்," என்று. 

வனஜாவின் மகன் பிரபு எழுந்து, தன் போனை நோண்டிக்கொண்டே வாச உள் பக்கம் நடந்தான். "வாயேன் பிரபு, நீயும் உதவலாமே," என்று நாகு அவனை அழைத்தாள். காதில்  விழவில்லையோ  இல்லை விழாத மாதிரி நடித்தானோ, தெரியவில்லை; சோஃபாவில் அமர்ந்து காதில் இயர் போன்ஸ் மாட்டிக்கொண்டு வெளி உலகுடன் தொடர்பை துண்டித்தான்.

Saturday, May 26, 2018

துடுப்பில் அடங்கிய துடிக்கும் நினைவுகள்

"ஐயோ, தோசை ரொம்ப ஒட்டிக்கறது," மருமகள் சாரதா அலுத்துக் கொண்டாள். "ஏன் தான் இந்த வெல்ல தோசையை பண்ண ஆரம்பிச்சேனோ!"

மெதுவாக அங்கு நடந்து வந்த மாமியார் விமலா, "நான் பார்க்கட்டுமா?" என்று கேட்டாள்.

Friday, April 13, 2018

ராம்

ருக்மிணியால் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மேடை மீது அவளுடைய தோழி மது அவையோர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வணங்கினாள். தன்னுடன் ஆடிய, அவள் பயிற்சி கொடுத்த மாணவ மாணவிகளும் அற்புதமாக ஆடியிருந்தார்கள். அவையில் எழுந்த கரகோஷம் அதற்கு அத்தாட்சி. இது வெறும் மகிழ்ச்சிக்காக ஆடப்படும் நடனம் அல்ல, சிந்திக்கவைக்கும் கருத்தும் கூட.

Thursday, March 1, 2018

இங்கும் ஒரு ஜான்சி ராணி

"என்ன பொன்னுத்தாயி? பள்ளிக்கு கிளம்பி விட்டாயா?" என்று பக்கத்து வீட்டு காஞ்சனா கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள்.

"அதுக்குத்தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஆபிஸிலிருந்து போன் வந்தது..." முழு உண்மையை கூறுவதா வேண்டாமா என்று தயங்கியவள், சந்தோஷம் தாங்காமல் மேலும் கூறினாள், "என்னை நிரந்தரமாக்கப் போகிறார்களாம்!"

Sunday, January 14, 2018

சோதனை

பொங்கி வரும் எண்ணங்களில் சிக்கிக் கொண்டு நின்றாள் பிரபா. அவளுடைய உயிர் தோழி கமலாவை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம், ஆனால் இப்பொழுது அவளை எந்த முகத்துடன் சந்திக்கப் போகிறோம் என்ற பயம் மறுபக்கம். பேசாமல் வந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் நழுவி விடலாமா என்று கூட ஒரு நொடி யோசித்து வெளியேறும் நோக்கத்துடன் சபையின் வாசற் கதவை ஏக்கத்துடன் பார்த்தாள். கமலா தன்னை பார்ப்பதற்கு முன் மெதுவாக வெளியேறிவிடலாம் என்று முற்படவும் செய்தாள்.