என் மகள் தமிழ் படித்து முடிப்பதற்குள் எனக்கே தமிழ் மறந்து போய் விடும் போல இருக்கிறது. எழுத்துக்கூட்டி படித்தாலும், அந்த வார்த்தைகளே என்ன என்று புரியாததால், மரண வேதனையாக இருக்கிறது. "போரும்மா" என்று அவள் கெஞ்சும்பொழுது, நிஜமாகவே போரும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக படிப்பதால் அதற்க்கு அர்த்தமும் புரிந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ஏன்தான் பேசும் பாஷையும், எழுதுவதிலும் இவ்வளவு வேறு பாடுகளோ! அவர்களோடு - அவாளோட; விற்பதற்கு - விக்கறதுக்கு....
ஆனால், ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள சொல்கிறேன். இங்கிலிஷில் படிக்க ஆரம்பித்த பொழுதும் இதே திணறல் தான். அப்பொழுதெல்லாம் இங்க்லீஷ் கதைகளை தமிழில் சொல்ல சொல்வாள். இப்பொழுதெல்லாம், தமிழ் கதைகளை இங்கிலிஷில் சொல்ல சொல்கிறாள்! என்ன ஒரு மாற்றம்! இதுதான் இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதோ?