Sunday, October 30, 2011

Lasting Impressions: Glory

Lasting Impressions: Glory: Glorious and radiant Resplendent and bright In rode the Sun Shining with natural light Dazzling all beholders With his flashy grin Bu...

Friday, October 28, 2011

Lasting Impressions: Lifestyle

Lasting Impressions: Lifestyle: "Have you seen today's paper?" Nikita asked Sahana. "Some discount sale?" Sahana asked eagerly. "I wanted to buy a good handbag. Is there ...

Thayakkangal

தாய்மை என்றாலே தயக்கங்கள் தான். நாம் எடுத்த முடிவு சரியா? நாம் சொல்லும் அறிவுரை சரியா? நாம் கோவிப்பது சரியா? நாம் விட்டுக்கொடுப்பது சரியா?

தீவாளி அன்று என் தோழியின் ஒரு போட்டோ பார்த்தேன். அவள் செய்த இனிப்பு கார பண்டங்களை படம் பிடித்திருந்தாள். இந்த வருடம் நான் எதையுமே செய்திருக்கவில்லை. என் குழந்தைகள் தீவாளி நாட்களை நினைவு படுத்தும் பொழுது என்ன சொல்வார்கள். "கிராண்ட் ஸ்வீட்ஸ் மிக்சர் ஞாபகம் இருக்கா?" என்று தானே பேசிக்கொள்வார்கள்? நான் பெருமையாக சொல்லுகிறேனே "எங்க அம்மா செய்யும் மிக்சர்" என்று, அந்த மாதிரி அவர்களுக்கு ஒன்றுமே நினைவு வராதே?

ஆனால் தோழி பதில் சொன்னது என்னை நெகிழ வைத்தது. "அவர்கள் சொல்வார்கள் என் தாய் புத்தகங்கள் எழுதினாள்" என்று. மிக்சர் ஜாங்கிரிக்கு ஈடு இல்லை என்றாலும் அவர்களும் பெருமை படும்படி நாம் எதோ செய்கிறோம் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் சில நேரங்களில் நமக்கு நினைவு வரும் போல. ஆனால் கூடவே இந்த சந்தேகமும் கிளம்பியது - காபி டேபிள் பூக்சை எழுதுவதை விட இனிப்பு  செய்து கொடுத்தால் இன்னும் அவர்கள் நினைவில் நிக்குமோ என்னவோ?

Thursday, October 27, 2011

Lasting Impressions: True Friend

Lasting Impressions: True Friend: The King's Mistress by Emma Campion is slow moving, going round in circles though with an interesting historical plot. In one place, the h...

Monday, October 24, 2011

Vattam

பள்ளிக்கூடம், வீடு. இதுதான் அவள் உலகம். அவள் வயதினர் எல்லாரும் மால், சினிமா என்று செல்வார்கள். இவளையும் ஓரிரண்டுமுறை அழைத்திருக்கிறார்கள். ஆனால், இவள் தயங்குவாள். 

அவர்களைப்போல் இவளிடம் அழகிய ஆடைகள் இல்லை. மொபைல் கூட இவளுக்கு தேவை என்றுதான் பெற்றோர்கள் வாங்கியிருந்தார்கள். காசுக்கு குறைவு என்று சொல்ல முடியாது. மற்றவர்களைப்போலதான். ஆனால் இவளுடை பெற்றோர்கள் எளிமையாக வாழவிரும்புவர்கள். இந்த காலத்திற்கு அது ஒத்துவராத விஷயம். அதனால் அவர்கள் மகள் பாதிக்கபடுகிறாள் என்று கூட அறியாமல் இருந்தனர். அவர்களை பொறுத்தவரை, இது படிக்க வேண்டிய வயது. இவள் அடம் பிடித்திருந்தால், அவர்கள் கேட்டுர்பார்களோ என்னவோ. ஆனால் இவளும் விட்டுவிடுவாள்.

அதனால் இவள் இரண்டு உலகங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாள். பெற்றோர்களுக்கு இவள் வேதனை புரியவில்லை. இவள் வகுப்பில் இவளை எல்லோரும் ஒதுக்கவில்லை என்றாலும் அவர்களுடன் கலந்துகொள்ள இவளுக்கு தயக்கமாகவே இருந்தது. அவர்களுக்கும் இவள் வித்தியாசமாக தென்பட்டாள்.

படிப்பு ஒன்றுதான் இவளுக்கு ஆறுதல். பரிட்சையின் பொழுது இவளை சுற்றி பல பெண்கள் இருப்பார்கள், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள. ஆனால் முடிந்த அன்றைக்கு அவர்களெல்லோரும் படத்துக்கு போடும் ப்ளானில் இவள் சேர மாட்டாள். "போயேண்டா கண்ணு?" என்று தாய் வற்புறுத்தினால், "இல்லைமா போர்" என்று பொய் சொல்லுவாள். தாய்க்கு ஒரு புறம் கவலையாக இருந்தாலும், இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கும். அவள் மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வாள். அதை கேட்டு இவள் இன்னும் கூனி குறுகி போவாள். இவள் ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து விட முயற்ச்சி செய்தாள். ஆனால் அந்த வட்டம் குறுகிக்கொண்டே போனது. ஒரு நாள் அது கழுத்தில் ஏறி மேலே இருக்கும் பானில் இருந்து தொங்க செய்தது.

தாய் பதறிப்போனாள். "என்ன குறை வைத்தேன் உனக்கு?"

குறை வெளியிலா, அவள் மனதிலா என்று இனிமேல் ஆராய்ந்து என்ன பயன்?

Friday, October 21, 2011

Mazhaikaala Megangal

வெளியில் எட்டிப்பார்க்கும் பொழுது அப்படியே பிரமிப்பில் உறைந்துபோனேன் நான். ஹெலிகாப்ட்டர் பூச்சிகள் அங்கே பெரிதாக வளர்ந்திருக்கும் மரத்தை மேகம்போல் சுற்றி வந்தன. சில நாட்களாகவே அங்கு பட்டாம்பூச்சிகளையும் கண்டு வருகிறேன். இன்று காலை, இரு கருங்குயில்கள் எதோ வாக்குவாதம் செய்வதுபோல் கத்திக்கொண்டிருந்தன. நடுவில் இன்னொரு குயில் - பெண்குயிலோ  - கூடவே எதோ தான் நினைப்பதையும் சொல்லிக்கொண்டிருந்தது.

சில நேரங்களில் அந்த கதிரவன் மேகங்களுடன் சேர்ந்து எவ்வளவு கோலங்களை வானத்தில் இடுகிறான். இப்படி ஒரு அழகை கண்டு கவிஞர்கள் ஏன் கவிதை எழுதமாட்டார்கள்! இந்த நேரத்தில் தோணும், இந்த டெட்லைன் ரொம்ப தேவையா நம் வாழ்க்கைக்கு! எல்லாத்தையும் விட்டு, வானத்தின் கீழே,  அந்த மேகங்களிலேயே மிதந்து செல்லலாமே, கற்பனை லோகங்களுக்கு!

Thursday, October 20, 2011

Lasting Impressions: Finding Heroes

Lasting Impressions: Finding Heroes: All around me, I sense failing is the flavour of the season. - Or maybe, it has always been, but I am suddenly hearing about this a lot. Abo...

Wednesday, October 19, 2011

Cheenargalum Tharamum

சமீபத்தில் ஒரு புத்தகம் திருத்திக்கொண்டிருந்தேன். ஜப்பானில் தயாரிக்கப்படும் போருட்கள் என்றாலே ஒரு காலத்தில் தரம் இல்லை என்று பொருள். இன்று நமக்கு தெரியும், ஜப்பானின் கதை. தொழிலில் வழிகாட்டியாகி இருக்கிறார்கள்.

இரண்டு நாள் முன்னே ஒரு மெயில் வந்தது. சீனாவில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் அப்படியே சாய்ந்துவிட்ட ஒரு படம் அது. நம் நாட்டுலே சீனப்பொருள்கள் வந்த புதிதில் மலிவு விலை என்பதால் ஆர்வத்தை உண்டாக்கினர். ஆனால் அவை தரம் குறைந்தது மட்டும் இல்லாமல் அபாயகரமா என்ற அச்சத்தையும் உண்டாக்கின. இந்த படத்தைப்பார்க்கும் பொழுது, நல்ல வேளை சென்னையை சுற்றி இன்னும் வீடு கட்ட இடமிருக்கிறது என்ற நிம்மதி உண்டாகியது.

ஆனால் அது கூடவே ஜப்பானைப்போல அவர்களும் தரத்தில் உயர்ந்து வருவதற்கு தடை ஏதும் இல்லை என்று தோணியது. நாம் நடுவாந்தரமாக  இருந்து விடுவோமோ என்ற கவலையும் உண்டாகிறது. ஊழல் பிடித்த இந்த நாட்டை திருத்தவில்லை என்றால் நம் நாடே சாய்வதற்கு நேரம் எடுக்கதல்லவா?

Monday, October 17, 2011

Lasting Impressions: Bubbling Heart

Lasting Impressions: Bubbling Heart: You are too busy to talk So am I! You have your road to walk So do I! We met, and I thought Our hearts met too But unspoken though my...

Saturday, October 15, 2011

Setril Kaal, Vaanatthil Kann

வெய்யிலில் நின்று, குனிந்து வயலில் வேலை செய்யும் தன் தந்தையை பார்க்கும் சரவணனுக்கு மனதில் எதோ ஒரு ஏக்கம். குளிர்ந்த காரில் முதலாளி வந்து, வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நிலங்களை பார்த்து விட்டு, அங்கு வேலை செய்பவர்களுக்கு பத்து ரூபா ரொம்ப தாராளமாக கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு சென்றவரை அவனும் கவனித்துக்கொண்டிருந்தான். அவர் மகள் கலா வண்டியில்தான் உட்கார்ந்திருந்தாள் . காரின் எசியை பெரிதாக்கி, பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள். இவனை விட ஓரிரண்டு வயதுதான் அதிகமாக இருக்கும். பட்டிணத்தில்  படிக்கிறாள் என்று கேள்விப்பட்டிருந்தான்.

இவன் பக்கம் முதலாளியின் கண் திரும்பியது. "என்னடா? என்ன செய்யற?"

"படிக்கறேன்...அய்யா." அந்த கடைசி வார்த்தை அவனையும் மிஞ்சி ஒரு பழக்கத்தில்தான் வந்தது.

"படிச்சி என்ன கிழிக்கப்போற? வயல்லத்தானே வேல செய்யணம். உன் அய்யாக்கு உதவலாமில்ல?"

இவன் தலை குனிந்து பதில் பேசவில்லை.

அய்யாவும் வண்டியில் ஏறிச்சென்று விட்டார். அப்பொழுது கலா அந்த ரேடியோவுடன் இசைந்துப் பாடிக்கொண்டிருந்தாள். அவனுக்கும் இதையெல்லாம் அடையவேண்டும், அவன் தந்தை தாய் தங்கை இந்த சுகங்களை அடைய வேண்டும் என்றுதான் ஆசை... 

தானும் தந்தையை போல சேற்றில்தான் வாழ வேண்டுமா? இல்லை, அவன் இந்த வயலில் வேலை செய்யமாட்டான் என்று தீர்மானித்துக்கொண்டான்.

அவனைப்போல பல இளைஞர்களும் அவன் வகுத்த பாதையை கடைப்பற்றி இன்ஜினியரிங் படித்தனர்... அவர்கள் வாழ்க்கையும் மேன்பட்டன. ஆனால் என்ன, நம் நாட்டில் யாரும் பயிரிடத்தான் ஆளே இல்லை.

Tuesday, October 11, 2011

Padippathilirunthu Adutthakkattam

கதை புத்தகம் படித்தே வாழ்க்கையை ஓட்டுவதற்கு தயாராக இருந்த நான், இன்று நான் எழுதிய ஒரு கதை புத்தகம் வெளியிட்டு ப்ளிப்கர்ட் என்னும் சைடில் விற்பனையும் ஆகிறது என்று தெரிந்ததும் இருக்கும் குதூஹலம்! - 


இது ஒரு காதல் கதை... ஆனால் இதை எழுதினதே ஒரு பெரிய கதை! இந்த பாதை புதியது, அனுபவம் மிகவும் அற்புதமானது. தன் பிள்ளையை கையில் ஏந்துவது எவ்வளவு சுகமோ, அத்தனை ஆனந்தம், அத்தனை சுகம் இதிலும் உள்ளது!

நம் பேரை அட்டையில் பார்ப்பது எவ்வளவு திருப்தியாக இருக்கிறதோ, அவ்வளவே திருப்தி இதை படிப்பவர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்!

உங்கள் நல் வாழ்த்துக்களை கோரி இன்றைக்கு விடை பெறுகிறேன்.

Lasting Impressions: A Game of Elastic

Lasting Impressions: A Game of Elastic: Suddenly, I remembered this game I used to play as a kid. I realised that I had played this when under 13, in Delhi, but never in Calcutta. ...

Lasting Impressions: A Game of Elastic

Lasting Impressions: A Game of Elastic: Suddenly, I remembered this game I used to play as a kid. I realised that I had played this when under 13, in Delhi, but never in Calcutta. ...

Monday, October 10, 2011

Nyabagangal

சிறிய துளிகள்
பொட்டுப்போல் மேலே
சொட்டுச்சொட்டாய்
விழுந்து எழுப்ப
சிறிய சிறிய நினைவுகள்

அந்த அரக்கு நிற பேனா
தோட்டத்தில் காய்க்கும்
கொய்யா, மாதுளை
பட்டுப்போன ரோஜா செடி
மண்புழு, அதை மூடிய கல் தரை

அண்ணாவுடன் மோதல்
அம்மாவிடம் சண்டை
அப்பாவிடம் ஒரு துளி பயம்
இடியிநோசை கேட்டு
சுருண்டு படுத்தல்

தெருக்களில் திரிந்து
வீட்டை மறந்து
நண்பர்களுடன் விளையாடி
பேசி, நடந்து
மெதுவாக வீடு திரும்பி

பள்ளியில் கழித்து
பேருந்தில் கதை பரிமாரித்து
தூங்கி வழிந்து
பிடித்துக்கொள்ளாமல்
நின்று, பாடி, விளையாடி

கரும்புத்துண்டுகளை
தனியாக ரசித்து
டிவி முன் வாயை பிளந்து
பட்டாசு வெடித்து
வேடிக்கை பார்த்து

ஒரு சின்ன சொல்
ஒரு பறக்கும் கார்
பெண்ணின் குரல்
மகனின் சிரிப்பு
போக்கில் விழுந்த வார்த்தை

எது எதை தீண்டும்
எதை நினைவூட்டும்
எந்த ஞாபகத்தில்
மிதக்க வைக்கும்
அது அறியாததே ஒரு ருசி

அன்று துன்பம்
இன்று அதே நினைவு
ஒரு இன்பம்
அதை பிடித்துக்கொண்டு
பறக்கும் நான் 

இன்றிலிருந்து விடுத்து
நேற்றில் மிதந்து
லேசான நெஞ்சில்
நினைவுகளை பொருத்து
பறக்க வைக்கும் ஞாபகங்கள்.






Thursday, October 6, 2011

Lasting Impressions: Growing Up : Part III

Lasting Impressions: Growing Up : Part III: When I reach out the top shelf to take out the box with Bournvita packet in it; when I call up the grocers to place my order for the month;...

Engum Iruppaan

நம் நாட்டில் பல விஷயங்கள் வருந்தத்தக்கவைதான். எனிலும் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் விஷயம் நாம் எதிலும் கடவுளைக்காண்பதுதான். மரம், செடி கோடி, மிருகம், யாதாயினும் அதை ஓர் கடவுளின் வாஹனாமாகவோ அல்லது கடவுளின் ஒரு வடிவமாகவோ நினைத்து அதற்க்கென்றொரு நாள் குறித்து அதை வழிபடுவது ஒரு விதத்தில் எல்லா உயிரினங்களிலும் அந்த கடவுள்  இருக்கிறான் என்பத நமக்கு உணர்த்துகின்றன. ஒரு மரத்தை வெட்டினால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதை ஈடு செய்யும்படி பத்து மரங்களை நடுவார்களாம்! இது நம்மூரில் மட்டும் இல்லை, பர்மாவில் கூட இந்த பழக்கம் இருந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.

ஏன் உயிர் ஜீவன்கள் மட்டும் இல்லாமல் நமக்கு உதவும் ஆயுதங்களுக்கு கூட மதிப்பு கொடுக்கும் ஒரு பண்டிகை! எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்வதற்கு உதவும் எதுவானாலும் அதற்கு இந்த நாளில் கும்புடு போட்டு அதை கடவுளாக தொழுகிறோம். வாயில்லை, பேச்சுமூச்சுக்கிடையாதென்றாலும் அதில்லாமல் நமக்கு ஏது வரும்படி? அதை நினைவில் வைத்து, அதிலும் கடவுளை காணும் மனப்பான்மை இருக்கும் நாட்டில் பிறந்திருக்கிறோம் என்பது பெருமையாகத்தான் இருக்கிறது!

ஆனால் என்ன, இந்த காலத்து மாடர்ன்/சயண்டிபிக் சிந்தனைகள் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன, ரொம்பவே சிந்திக்க வைத்து சில சின்ன சின்ன, அழகான விஷயங்களை கொச்சைப்படுத்துவது மற்றும் இல்லாமல் அதை தூக்கி எரிய வைக்கின்றன. ஆனால், அதனால் கஷ்டப்படுவதும் நாம்தான்! மாட்டில் கடவுள் இருக்கிறானா என்று கேட்பது தவறில்லை. ஆனால் அதையும் ஒரு கருவியாக உபயோகிப்பதுதான் தவறு. இடம் வேண்டும், அதனால் காட்டை அழித்து, உணவைத் தேடி வரும் மிருகங்களை அழித்து, இதில் என்ன பாவம் என்று வாதாடுவதுதான் தவறு.

இந்த சிந்தனை மாறி மறுபடியும் எல்லா ஜீவன் கருவிகள் எல்லாவற்றிற்கும் கொடுக்க வேண்டிய மரியாதை தந்தால் தான் நாமும் வளமுடன் வாழ முடியும்.