நான் படிக்கும் காலத்தில், வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் நீர், உணவு, கூரை என்று சொல்லுவார்கள். இன்று கேட்டாலோ, செல் போன், ஐ-பாட், கம்ப்யூட்டர் - இதுதான் தேவை என்று சொல்கிற காலம் வந்துவிட்டது.
நீர் நிலையை நினைத்தாலோ, வயிற்றை கலக்கிறது. தண்ணீர் கிடைப்பதே அற்புதம் அதில் சுத்தமாக இருந்தால் போனஸ். உணவு - மருந்தாக இருந்தது விஷமாக மாறி விட்டது. கூரை ஒன்றுதான் ஏதோ சில பேர்களுக்காவது கிடைக்கிறது.
பொருளாதார வளர்ச்சி நமக்கு பல விஷயங்களை விரல் நுனியில் கொண்டு சேர்கின்றன. ஆனால் இதெல்லாம் இருந்தும், நமது மூன்று அடிப்படையான தேவைகளும் இன்று முழுமையாக நிறைவேறவில்லை. இதற்க்கு வழி என்ன?