கையளவு சிறிய மனசு
அதில் வானத்தையும் விட
அதிக ஆசை
பரந்த வெளியில் வீசும்
அந்தக் காற்றை ஈர்த்து
கட்டுப்படுத்தும் தேஹம்
உலகெங்கும் ஓடும் நீர்
அதைப் பானைபோல
அடக்கும் இந்த மண்ணுடல்
சடலத்தை எரிக்கும்
அதே தீயில் எரியும்
இந்த பூபோன்ற நெஞ்சம்
உலகத்தையே அடக்கும்
இந்த உடலையே ஆட்டும்
அந்த கையளவு சிறிய மனசு
No comments:
Post a Comment