ருக்மிணியால் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மேடை மீது அவளுடைய தோழி மது அவையோர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வணங்கினாள். தன்னுடன் ஆடிய, அவள் பயிற்சி கொடுத்த மாணவ மாணவிகளும் அற்புதமாக ஆடியிருந்தார்கள். அவையில் எழுந்த கரகோஷம் அதற்கு அத்தாட்சி. இது வெறும் மகிழ்ச்சிக்காக ஆடப்படும் நடனம் அல்ல, சிந்திக்கவைக்கும் கருத்தும் கூட.