"ஆர்யா, சிலிண்டர் தூக்க ஹெல்ப் பண்ணு, வா," சந்த்ரிகா தன்னுடைய பதினைந்து வயது மகனை அழைத்தாள். முதலில் மறுத்தவன், அவள் கோபத்திக்கொள்ளவே, வேண்டா வெறுப்பாக வந்தான். சொன்ன இடத்தில் வைத்த உடன், ஏதோ தோன்றியவனாக சந்த்ரிகாவை போட்டோ எடுக்கச் சொல்லி, மீண்டும் சிலிண்டரைத் தூக்கினான்.