Thursday, November 27, 2025

கதறும் ஞாயிறு

உதிக்கும் சூரியனுடன் பிறந்து, 
ஜொலிக்கும் ரத்தினங்களை தனது என்ற 
பெருமிதத்தில் மிதந்து, வளரும் 
தன் வலுவில் மயங்கி 
 
வீசும் காற்றில் அலை மோதி, வருந்தி,
வரும் இரவின் இருட்டில் மறைவோம் 
என்ற பயத்தில், இரு கரம் கூப்பி
வணங்கியும், கெஞ்சியும், கதறியும்

தான் தான் எல்லையற்ற வானத்தில் 
சஞ்சரிக்கும் ஞாயிறு, உலகத்தையே
ஒளிமயமாக்கும் வல்லவன் என்று 
அறியாமல், குறுகிய கரைகளின் 

இடையில் பிரதிபலிக்கும் தனது பிம்பத்தையே 
தான் என்று நினைத்து, பேதளித்து 
திணறி தத்தளிக்கும் நீ யார், பார், 
ஆழமாகப் பார், உன் உண்மையைப் பார்.   

 

  
 

No comments:

Post a Comment