Monday, December 8, 2025

கொந்தளிக்கும் மனம்

தினம் தெரிந்து மறையும் சூரியன் 
எழுந்து ஓயும் அலைகள்
காற்றில் தான் என்ன புதுமை?
மணலும் தூசு மலைகள்
 
கடலுக்குள் விளங்காத பல உயிர்கள் 
மனிதன் தொடாத பல வாழ்வுகள் 
பிறந்து, வளர்ந்து, கூடி விளையாடி 
வேட்டையாடி, இறந்த கதைகள் 



இவைகளை தேடி நாமும் ஆவலுடன் 
நம் ஓட்டத்தை நிறுத்தி கரையில் நின்றும் 
புதிய அனுபவங்களை நாடியும் 
களைத்து போன வாழ்வில் உற்சாகத்தை கூட்டவும்
 
தேடி அலையும் நம்மை கேட்கிறேன் 
வெளியே கிடைப்பது சில நொடிகளே 
கால  சக்கிரத்தில் சுழன்று மறைந்திடவே 
சாதித்தது எதுவோ, பயன் எதுவே?

வெளியே காண்பது உள்ளத்தை தொடுமா?
மனதிலே பல உலகங்கள் தோன்றி மறையாதா? 
கொந்தளிக்கும் மனம் அமைதி அடையாதா? 
சூரியன் உதித்து, அலை அடங்கி, மெய் சிலிர்க்காதா? 

தேவை வெறும் நானே, எனது இருப்பே 
உண்மையை உணர ஏங்கும் துடிப்பே 
நித்தம் அதை அடைய வேண்டும் விழிப்பே 
இதில் துளிக்கூட ஏற்படக்கூடாது சலிப்பே. 

No comments:

Post a Comment