சிறுப் பிள்ளைகள், பந்து விளையாடிக்கொண்டிருந்தன. பந்து வீசியப் பையன் ஸ்டும்ப்சை குறிப் பார்த்து வீசினான். அவன் குறி தப்பவில்லை. "போல்ட்!" என்று எல்லாரும் கையை தூக்கினர்.
பேட் செய்துக்கொண்டிருந்தப் பையன் "இல்லை! சீடிங்!" என்றான்.
"என்னடா சீடிங்? நேர விக்கெட்ல பட்டுது," என்று ஒரு பையன் வந்தான்.
பேட்டால் அவன் நீட்டிய கையை அடித்து அந்தப் பையன், "இல்ல! சீடிங்" என்று சாதித்தான்.
"டேய் மறுபடியும் அடிக்கறான்! வாங்கடா அவங்க அம்மாகிட்ட போய் சொல்லலாம்." எல்லாப் பிள்ளைகளும் கிளம்பின.
அந்தப் பையன் ஓடிக்கொண்டே தன் அம்மாவிடம் சென்று "அம்மா, எல்லாரும் என்ன வளையாட விடமாட்டேங்கறாங்கமா," என்று அழுதான்.
"இல்ல ஆண்டி அவன்தான்..."
"என் பையன போட்டு எப்பப்பார்த்தாலும் ஏமாத்தாதீங்க!" என்று விஷயம் தெரிந்துக்கொள்ளாமலேயே அந்தத் தாய் தன் மகனுக்காக பறிந்து வந்தாள்.
"இல்ல ஆண்டி அவன்தான் பேட்டால் அடிச்சான்." தன் சிவந்தக் கையை அடி வாங்கிய பையன் காட்டினான்.
அந்தத் தாய் திரும்பிப் பட்டென்று தன் மகனை அடித்தாள். எல்லா பிள்ளைகளும் வாயடைத்து நின்றன. "இனிமே அடிப்பயா?"
அந்தப்பையன் அழுதுக்கொண்டே தலையசைத்தான். "எல்லாரும் சேர்ந்து விளையாடுங்கள். மறுபடியும் அவன் அடித்தால் என்னிடம் சொல்லுங்கள். ஆனால் வளையாட்டுல செர்த்துக்கணம், சரியா?" என்று சொல்லி அந்தத்தாய் தன் பொறுப்பை நிறைவேற்றின திருப்தியில் தன் வேலைகளை கவனித்தாள்.
அடித்து "அடிப்பது தவறு" என்று கற்றுக்கொடுக்கும் இந்தத்தாய் வாழ்க.
No comments:
Post a Comment