Saturday, May 21, 2016

நாட்டிலே மழை

நிலவை மறைத்தது மேகம்
அதை கண்டு சிலிர்த்தது தேகம்
கோடையில் மழையின் வேகம்
உற்சாகத்தில் பறந்தது விவேகம்

மேகமும் திரண்டது
பூமியும் குளிர்ந்தது
உடலும் தணிந்தது
புத்துணர்ச்சி ததும்பியது

ஆஹா, கதிரவன் நகைத்தான்
என்றும் நிலைப்பவன் நான்தான்
என்று; வெப்பத்தை அழைத்தான்
மேகங்களைக் கலைத்தான்

கத்திரி வெயில் திரும்பியது
போது மே என்று மனம் கதறியது
உஷ்ணத்தில் உடல் கரைந்தது
அதை நினைந்து மனம் கரைந்தது

4 comments:

  1. Reminds me of a song in 25 year old film வசந்த மலர்கள் sung by
    S P B and Chitra

    இதுவரை இங்கே நிலவை மறைத்தது மேகம்
    இவள் வரவாளே இனிமேல் பௌர்னமி ஆகும்

    ReplyDelete
  2. வெற்றுக் காற்றின்
    வெறுமைக் சத்தங்கள்
    குயிலின் இசையால்
    நிரப்பப் படுகின்றன !

    ReplyDelete
  3. Thanks, don't remember hearing this. Will look it up :)

    ReplyDelete
  4. மழை பொழிந்ததில் பிறந்த்தது கவிதை, மழை நனைத்ததில் சிலிர்த்தது கவிதை

    suresh rajagopal

    ReplyDelete