Friday, July 1, 2016

தினம் ஒரு போராட்டம்

வைரம் போல் 
ஜொலிப்பேன் 
உன் கண்களைப்   
பறிப்பேன் 
கண் கூசுமென்று 
என்னைப் பூட்டாதே 
என் சுதந்திரத்தை 
நீ பறிக்காதே 




காற்றுபோல் 
திரிபவள் நான் 
உன் மனதில் 
சிறைப்படுத்தாதே 
நம் பாதைகள் 
சந்தித்தால் 
என்னைத் தடுத்து 
நிறுத்தாதே 

என்னால் எழும் 
உணர்ச்சிகள் 
அதை, அதை 
வசப்படுத்து 
மனதில் எழும் 
தீய எண்ணங்கள்   
அவைகளை நீ 
கட்டுப்படுத்து 

நான் நானாக 
வாழத் துடிக்கிறேன் 
உன் விஷமங்களால் 
பாதிக்கப் படுகிறேன்  
உனக்கு இது 
விளையாட்டு 
ஆனால் எனக்கு 
இது போராட்டம்.



No comments:

Post a Comment