தாய், தெய்வம் என்றுப் போற்றப்படுவாள்
இலக்ஷ்மி என்றும் பூசிக்கப்படுவாள்
தியாகத்தின் வடிவம் என வணங்கப்படுவாள்
அரக்கிப்போல் கூடக்காட்சி அளிப்பாள்
பூப்போல் நீ என காப்பாற்றப்படுவாள்
'அம்மா தாயே' என்று ஒடுங்கச்செய்வாள்
உலகம் தீயது என்று காக்கப்படுவாள்
'போடி வெளியே' என்றும் உதைக்கப்படுவாள்
பிறக்கும் முன்னே அழிக்கப்படுவாள்
பிறந்தபின் ராணிபோலும் வளர்க்கப்படுவாள்
உன் கடமை இதே என்று அடக்காப்படுவாள்
இதுதான் இறகு என்று பறக்கவும் செய்வாள்
விதி என்று பெருமூச்சு விட்ட அவள்
இன்று சீரி சிங்கம் போல் எழுவாள்
தெய்வம் அரக்கி இரண்டும் இல்லை என்பாள்
என்னை மனுஷியாக வாழ விடு என்று கெஞ்சுவாள்
இலக்ஷ்மி என்றும் பூசிக்கப்படுவாள்
தியாகத்தின் வடிவம் என வணங்கப்படுவாள்
அரக்கிப்போல் கூடக்காட்சி அளிப்பாள்
பூப்போல் நீ என காப்பாற்றப்படுவாள்
'அம்மா தாயே' என்று ஒடுங்கச்செய்வாள்
உலகம் தீயது என்று காக்கப்படுவாள்
'போடி வெளியே' என்றும் உதைக்கப்படுவாள்
பிறக்கும் முன்னே அழிக்கப்படுவாள்
பிறந்தபின் ராணிபோலும் வளர்க்கப்படுவாள்
உன் கடமை இதே என்று அடக்காப்படுவாள்
இதுதான் இறகு என்று பறக்கவும் செய்வாள்
விதி என்று பெருமூச்சு விட்ட அவள்
இன்று சீரி சிங்கம் போல் எழுவாள்
தெய்வம் அரக்கி இரண்டும் இல்லை என்பாள்
என்னை மனுஷியாக வாழ விடு என்று கெஞ்சுவாள்
No comments:
Post a Comment