Monday, December 12, 2016

வருமா வராதா

விழுந்த கிளைகளை எப்படி
ஓரம் கட்டுவது?
காற்றே வா, மெதுவாக வா, ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே...

சின்ன வயதில் இதை கற்றுக்கொண்ட ஞாபகம். 'நாடா' என்ற புயல் அவிழ்ந்தது. 'வராதா ' வருமா வராதா என்ற ஜோக்குகளை மிஞ்சி 'நான் வந்துட்டேன்!' என்று தன் வலிமை மீது சந்தேகப்பட்ட சென்னை வாசிகளுக்கு ஒரு பெரிய பாடம் கற்பிக்கும் வண்ணம் வந்துவிட்டது!



சுவர் இடிந்து விழுந்தது 
வந்தது போறும், போகாதா என்ற அளவுக்கு காற்று வீசி, மரங்களை பிடுங்கி எடுத்து, கட்டிடங்கள் மீது விட்டெறிந்து... அப்பப்பா! வருடம் முழுவதும் ஒன்றுமே தெரியாத அப்பாவிபோல் இருக்கும் இந்த காற்றும் மழையும் இன்று, 'என்னை அப்பாவி என்றாயா' என்று நம்மை ஒரு உலுக்கு உலுக்கியது.
பாதையை மறைக்கும் மரம் 

மூன்றாவது மாடியில் வசிக்கும் நான் இயற்கையின் இந்த ருத்ர ரூபத்தில் மே மறந்து, மயில் போல் ஆடும் மரத்தை ரசித்துக்கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று கண் சிமிட்டும் நேரத்தில் அது காணாமல் போயிற்று!

மழைக்கு ஒதுங்கிய மைனா 
மழைச்சாரல் மூடிய கதவின் அடியில் இருந்து நுழைந்து ஒரு சின்ன அருவியை உருவாக்கி விட்டது. பக்கத்து வீட்டில் ஒரு குட்டை தேங்கி, நிரம்பி வெளியில் வழிய ஆரம்பித்து விட்டது. அவர்கள் ஆபீஸ் சென்றிருந்ததால் அதையும் எங்கள் வீட்டையும் குழந்தைகளும் பெரியவர்களும் சுத்தம் செய்தனர்.
பல வீடுகளில் அடைக்கலம் நாடிய
தகைவிலான் குருவி 

அழகிய பாதை முழுவதும் மரங்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. எல்லோரும் கூடி அதையும் வெட்டி வழி செய்ய முயற்சித்தோம்... (அப்பொழுது இருந்த குதூகலம், ஆஹா, இதல்லவோ சமுதாய வாழ்க்கை!)


கடைசியில் ஒன்று தான் உறுதியாகிறது - நாம் என்னதான் கட்டிடங்களை உறுதிப்படுத்தினாலும் சரி, டெக்னாலஜியில் முன்னேறினாலும் சரி, நாம் தூசுக்கு சமம். எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் நம்மை இயற்கையோ, அல்ல செயற்கையா, நம் உண்மையை காட்டி விடும். அதை அறிந்து இடிந்து விழாமல் இருப்பதே நம்முடைய மிகப்பெரிய சாதனையாகும்.

No comments:

Post a Comment