"மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரர் தன் வண்டியை பொது பார்க்கிங்கில் விட்டிருக்கிறார்," என்று நளினி தன் கணவன் பார்த்திபனிடம் புகார் கொடுத்தாள்.
அவர்கள் வாழும் 100 வீடுகள் இருக்கும் குடியிருப்பில் பார்த்திபன்தான் செயலாளராக இருந்தான். விதிகளை அமல் படுத்தவேண்டும் என்பது அவனுடைய அழுத்தமான நம்பிக்கை மட்டும் இல்லாமல் அதற்காக அவன் எவ்வளவு கடுமையாக வேண்டுமென்றாலும் நடந்துகொள்ள ஆயத்தமாக இருந்தான். அவனைக் கண்டாலே பல பேர்களுக்கு ஆகாது என்று அறிந்திருந்தும் அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.