Tuesday, August 22, 2017

கல்லிலும் இருக்கும்

காலில் பட்டு, தூணில் இடித்து,
துள்ளிச்சென்றது ஒரு சிறியக் கல்
அதற்கும் விளையாடத் தோன்றியதோ?
அதன் உற்சாகத்தைக் கண்டு மகிழுங்கள்.


காற்று வீசும், இல்லை பாடும்
கேளுங்கள் பல இனிய ராகங்கள்
தீயின் கோபம், அதிலிருந்து
சிதறிப் பறக்கும் பல ஜ்வாலைகள்

அலைகளாக ஆடி வரும்
நீரின் இன்பத்தைக் காணுங்கள்
மணலும் காற்றுடன் பறக்க
கூடப் பறந்தன துன்பங்கள்

கல்லோ, மண்ணோ, காற்றோ, வெயிலோ
எதிலும் தெரிகிறது ஏதோ உணர்ச்சிகள்
இதில் எது தான் ஜடம், உயிரற்றது எது
என்று சற்று எண்ணிப் பாருங்கள்.



2 comments:

  1. அருமையான வரிகள். அற்புதமான சிந்தனை

    ReplyDelete