Sunday, October 30, 2011
Lasting Impressions: Glory
Lasting Impressions: Glory: Glorious and radiant Resplendent and bright In rode the Sun Shining with natural light Dazzling all beholders With his flashy grin Bu...
Friday, October 28, 2011
Lasting Impressions: Lifestyle
Lasting Impressions: Lifestyle: "Have you seen today's paper?" Nikita asked Sahana. "Some discount sale?" Sahana asked eagerly. "I wanted to buy a good handbag. Is there ...
Thayakkangal
தாய்மை என்றாலே தயக்கங்கள் தான். நாம் எடுத்த முடிவு சரியா? நாம் சொல்லும் அறிவுரை சரியா? நாம் கோவிப்பது சரியா? நாம் விட்டுக்கொடுப்பது சரியா?
தீவாளி அன்று என் தோழியின் ஒரு போட்டோ பார்த்தேன். அவள் செய்த இனிப்பு கார பண்டங்களை படம் பிடித்திருந்தாள். இந்த வருடம் நான் எதையுமே செய்திருக்கவில்லை. என் குழந்தைகள் தீவாளி நாட்களை நினைவு படுத்தும் பொழுது என்ன சொல்வார்கள். "கிராண்ட் ஸ்வீட்ஸ் மிக்சர் ஞாபகம் இருக்கா?" என்று தானே பேசிக்கொள்வார்கள்? நான் பெருமையாக சொல்லுகிறேனே "எங்க அம்மா செய்யும் மிக்சர்" என்று, அந்த மாதிரி அவர்களுக்கு ஒன்றுமே நினைவு வராதே?
ஆனால் தோழி பதில் சொன்னது என்னை நெகிழ வைத்தது. "அவர்கள் சொல்வார்கள் என் தாய் புத்தகங்கள் எழுதினாள்" என்று. மிக்சர் ஜாங்கிரிக்கு ஈடு இல்லை என்றாலும் அவர்களும் பெருமை படும்படி நாம் எதோ செய்கிறோம் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் சில நேரங்களில் நமக்கு நினைவு வரும் போல. ஆனால் கூடவே இந்த சந்தேகமும் கிளம்பியது - காபி டேபிள் பூக்சை எழுதுவதை விட இனிப்பு செய்து கொடுத்தால் இன்னும் அவர்கள் நினைவில் நிக்குமோ என்னவோ?
Thursday, October 27, 2011
Lasting Impressions: True Friend
Lasting Impressions: True Friend: The King's Mistress by Emma Campion is slow moving, going round in circles though with an interesting historical plot. In one place, the h...
Monday, October 24, 2011
Vattam
பள்ளிக்கூடம், வீடு. இதுதான் அவள் உலகம். அவள் வயதினர் எல்லாரும் மால், சினிமா என்று செல்வார்கள். இவளையும் ஓரிரண்டுமுறை அழைத்திருக்கிறார்கள். ஆனால், இவள் தயங்குவாள்.
அவர்களைப்போல் இவளிடம் அழகிய ஆடைகள் இல்லை. மொபைல் கூட இவளுக்கு தேவை என்றுதான் பெற்றோர்கள் வாங்கியிருந்தார்கள். காசுக்கு குறைவு என்று சொல்ல முடியாது. மற்றவர்களைப்போலதான். ஆனால் இவளுடை பெற்றோர்கள் எளிமையாக வாழவிரும்புவர்கள். இந்த காலத்திற்கு அது ஒத்துவராத விஷயம். அதனால் அவர்கள் மகள் பாதிக்கபடுகிறாள் என்று கூட அறியாமல் இருந்தனர். அவர்களை பொறுத்தவரை, இது படிக்க வேண்டிய வயது. இவள் அடம் பிடித்திருந்தால், அவர்கள் கேட்டுர்பார்களோ என்னவோ. ஆனால் இவளும் விட்டுவிடுவாள்.
அதனால் இவள் இரண்டு உலகங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாள். பெற்றோர்களுக்கு இவள் வேதனை புரியவில்லை. இவள் வகுப்பில் இவளை எல்லோரும் ஒதுக்கவில்லை என்றாலும் அவர்களுடன் கலந்துகொள்ள இவளுக்கு தயக்கமாகவே இருந்தது. அவர்களுக்கும் இவள் வித்தியாசமாக தென்பட்டாள்.
படிப்பு ஒன்றுதான் இவளுக்கு ஆறுதல். பரிட்சையின் பொழுது இவளை சுற்றி பல பெண்கள் இருப்பார்கள், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள. ஆனால் முடிந்த அன்றைக்கு அவர்களெல்லோரும் படத்துக்கு போடும் ப்ளானில் இவள் சேர மாட்டாள். "போயேண்டா கண்ணு?" என்று தாய் வற்புறுத்தினால், "இல்லைமா போர்" என்று பொய் சொல்லுவாள். தாய்க்கு ஒரு புறம் கவலையாக இருந்தாலும், இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கும். அவள் மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வாள். அதை கேட்டு இவள் இன்னும் கூனி குறுகி போவாள். இவள் ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து விட முயற்ச்சி செய்தாள். ஆனால் அந்த வட்டம் குறுகிக்கொண்டே போனது. ஒரு நாள் அது கழுத்தில் ஏறி மேலே இருக்கும் பானில் இருந்து தொங்க செய்தது.
தாய் பதறிப்போனாள். "என்ன குறை வைத்தேன் உனக்கு?"
குறை வெளியிலா, அவள் மனதிலா என்று இனிமேல் ஆராய்ந்து என்ன பயன்?
Friday, October 21, 2011
Mazhaikaala Megangal
வெளியில் எட்டிப்பார்க்கும் பொழுது அப்படியே பிரமிப்பில் உறைந்துபோனேன் நான். ஹெலிகாப்ட்டர் பூச்சிகள் அங்கே பெரிதாக வளர்ந்திருக்கும் மரத்தை மேகம்போல் சுற்றி வந்தன. சில நாட்களாகவே அங்கு பட்டாம்பூச்சிகளையும் கண்டு வருகிறேன். இன்று காலை, இரு கருங்குயில்கள் எதோ வாக்குவாதம் செய்வதுபோல் கத்திக்கொண்டிருந்தன. நடுவில் இன்னொரு குயில் - பெண்குயிலோ - கூடவே எதோ தான் நினைப்பதையும் சொல்லிக்கொண்டிருந்தது.
சில நேரங்களில் அந்த கதிரவன் மேகங்களுடன் சேர்ந்து எவ்வளவு கோலங்களை வானத்தில் இடுகிறான். இப்படி ஒரு அழகை கண்டு கவிஞர்கள் ஏன் கவிதை எழுதமாட்டார்கள்! இந்த நேரத்தில் தோணும், இந்த டெட்லைன் ரொம்ப தேவையா நம் வாழ்க்கைக்கு! எல்லாத்தையும் விட்டு, வானத்தின் கீழே, அந்த மேகங்களிலேயே மிதந்து செல்லலாமே, கற்பனை லோகங்களுக்கு!
Thursday, October 20, 2011
Lasting Impressions: Finding Heroes
Lasting Impressions: Finding Heroes: All around me, I sense failing is the flavour of the season. - Or maybe, it has always been, but I am suddenly hearing about this a lot. Abo...
Subscribe to:
Posts (Atom)