என்ன நினைத்தாய் நீ
மனிதனை படைக்கும் பொழுது
உன்னைப்போல் ஒருவன்
உன் உருவம், உன் குணம்
என்றெல்லாம் திட்டமிட்டு
ஆறறிவையும் கொடுத்து
நிறைய வளமும் கொடுத்து
இந்த பூமியில் திரிய விட்டு
கூடவே ஒரு முள்ளையும்
வைத்து தைத்து
இது போறாது, இன்னும் வேண்டும்
என்ற ஒரு வெறி, சிறிய பொறி
ஆரம்பித்து, இன்று அது
ஒரு பெருந்தீயாய் வளர்ந்து
நீ படைத்த பூமியை எரித்து
தன்னையும் வாழ விடாமல்
மற்றவர்களையும் எரித்து
தூள் தூள் ஆக பறக்கவைக்கும்
இந்த முள், மனதை thulaitthu
திருப்தியை அழித்து
இந்த சிறிய முள், இதை தைத்த நீ
பாவமாகத்தான் தெரிகிறாய்
இல்லையே! நான் என்ன செய்தேன்?
ஏதொ, நாளடைவில்
அவனாகவே உரு எடுத்து
அவனாகவே வளர்ந்துவிட்டான்
அடக்கடவுளே, இந்த பேயை
அழிப்பதெப்படி என்று நினைக்கிறாயா?
இல்லை, தானே தன்னை அழித்து
ஒட்டுமொத்தமாக ஒழியட்டும்
என்று காத்துக்கொண்டிருக்கிறாயா?
எல்லாம் வல்ல இறைவனே
No comments:
Post a Comment