Tuesday, July 5, 2011

உருகும் மனம்

 அலை எழும்பி ஓய்வது போல்
நிலைக்கும் அந்த மௌனம்
குழந்தைகள் கிளம்பி போன பின்னே
திரும்பும் வேளையில் கலக்கும் நெஞ்சம்
எல்லாம் சரிதானே?

சிரித்துக்கொண்டே வருகையில்
நம்மை அறியாமலேயே ஒரு பெரு மூச்சு
ஆனால் வீட்டில் நுழைந்ததும்
ஒரே சத்தம், காச்சு மூச்சு
இதுவும் மகிழ்ச்சித்தானே?

போரும் நிறுத்து, என்ற ஒரு அதட்டல்
அதையும் மிஞ்சினால் மிரட்டல்
எத்தனை நேரம் என்ற கூச்சல்
எல்லாம் மிஞ்சிய விளையாடல்
இது நடப்பதுதானே?

கீழே போய் விளையாடு என்று அனுப்பி
மறுபடியும் அந்த மௌனத்தை ரசித்து
ஓய்வு எடுக்கும் வேளையில் ஒரு குரல்
மகனோ மகளோ அழுவது
இது வேதனைதானே?

அரக்க பறக்க ஓடும் நீ தாய்
உன் மக்களை ஓடி அணைப்பாய்
என்ன என்று கண் துடைப்பாய்
எவன் அவன் என்று எழுந்து நிற்ப்பாய்
உன் மனம் உருகுவதுனால்தானே?



No comments:

Post a Comment