பெண் வேலை செய்ய
வேண்டும் வேண்டாம், 
சட்டம் வைக்க நீ யார்?
கேட்க துடிக்கும் நா
திறமையை ஒளித்து
வீட்டில் அடைத்து
பூட்டி வைக்கவா
பிறந்தாள் அவள்?
தனக்கென ஒரு அழகிய
பாதையை வகுத்து
கூறிய பார்வையுடன்
முன்னேற துடிக்கும்
அவளை தடுக்க
நீ யார்
என்று கேட்க
எழும்பும் நா
சோர்ந்து, களைத்து
நாபுரமும் சுற்றி
அயர்ந்த கண்கள்நாவை தடுத்து
பார் சற்று அங்கே
என்று காட்டும் காட்சி
ஒரே கணம்
மனதை துளைத்து 
ஐயோ பாவம்
என்று சொல்ல 
இவன் நிலை 
அதைவிட பரிதாபம்
என்ன சம்பளம்?
எங்கே வேலை?
என்ன பதவி?
என்ற கேள்வி
சுற்றி சுற்றி வர
அந்த ஆண் மகன்
தனக்கென்று வழி தேடி
செல்ல ஒரு வழி ஏது!
தனக்கு பிடிக்குமா 
என்று கேட்காமல்
ஊருக்கு வேணுமே
என்று ஓடி அலைந்து
"கார் ஸ்கூட்டர் பங்களா"
உழைத்து சேகரித்து
அணில் போல் குவித்து 
அவன் நிலை மட்டும் என்ன?
ஊருக்காக வாழ்ந்து
அதற்க்கு பயந்து சாகும்
அவனும் ஒரு விதத்தில்  
அடைக்க பட்டவன் 
பார்ப்பதற்கு ஆஹா
விடுதலை பெற்றான்
அவன் என்று 
குமறும் பொழுது
அவனுக்கு குமறல்
மனதில் புழுக்கம்
தனக்குள் சிக்க வைக்கும்  
அந்த சக்ரவ்யூஹம்.
No comments:
Post a Comment