Saturday, September 24, 2011

திறமைக்கு ஒரு சவால்

நேற்று ஒன்று கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்தவரின் மகன் கூடைபந்து கால்பந்து விளையாட்டுகளில் மிக ருசி வைப்பவன். சிறு வயதிலிருந்தே இந்த பந்தயங்களில் பங்கு பெற்றவன். கல்லூரியில் படிக்கிறான் இப்பொழுது. அவர் தந்தை அவனுக்காக மாநில அளவில் குழுவில் சேர்வதற்கு தேர்வில் பங்கும் ஏற்று நாலறைலக்ஷமும் கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் தேர்வில் பங்கேற்காமலேயே சிலர் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்!

என்னுடைய வியப்பை தெரிவித்து எப்படி எல்லா இடங்களிலும் ஊழல் பரவி இருக்கிறது என்று சொல்லும் பொழுது அவர் சொன்னார் - அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், பெண் மருத்துவப்பட்டிப்பிர்க்கு நாற்பது லக்ஷம்  கட்டியிருக்கார்களாம்! 

அப்படியாவது அந்த படிப்பு வேண்டுமா என்றாகி விட்டது. இப்படி பணத்தைக்கட்டி வரும் மருத்துவர்களை நம்பலாமா? இவர்களும் தான் கட்டிய முதலை வசூல் செய்வதில் தானே குறியாக இருப்பார்கள்? அதுவும் சொன்னார், இந்த உறவினர். ஒரு மருத்துவர் அவர் இடம் வருத்தப்பட்டுக்கொண்டாராம் - அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு வேண்டுமென்றால் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிலிருந்து எல்லாருக்கும் பணம் தரவேண்டுமாம்!

இதற்கு யாரை பழிப்பது? நாமே நம் தலையில் மண்ணை வாரிக்கொள்கிறோம் - கொல்கிறோம், நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ. வாழ்க்கை தரம் தேறி விட்டதென்பது ஒரு சிலருக்குத்தான். மற்றவர்களுக்கும் அந்த நிலை அடையவேண்டும் என்ற ஆர்வத்தில் எப்படி வேண்டுமானாலும் அந்த பணத்தை சம்பாதித்துவிடவேண்டும் என்ற நோக்கம் அதிகரிக்கும் இந்த நாளில் வேற எதை எதிர்பார்க்க முடியும்? நாள்ல நிலையில் இருப்பவர்களுக்கோ எவ்வளவு இருந்தாலும் போராதுப்போல! 

ஊழல் ஒழிய நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்? எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டும் என்ற வெறி நம் வேலையில் தெரிய வேண்டும் என்பது ஒரு காலம். இன்று திறமை பேசவில்லை, பணம் தான் பேசுகிறது.


No comments:

Post a Comment