Thursday, September 8, 2011

Nizhal

நேற்று ஒரு நடுத்தர வயதான தம்பதியரை சந்திக்கச்சென்றிருந்தேன். அவர்களுடன் பெசிக்கொண்டிருந்தப்போழுது சில பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்துக்கொண்டார்கள். அது அவர்களுக்கு சங்கடமான நினைவுகள் என்று புரிந்துக்கொண்டேன். ஆனால் அந்த விஷயத்தை அவர்களிடம் பேச வேண்டிய கட்டாயம். அதை அவர்கள் பேசி முடித்தபிறகு, மற்ற விஷயங்களை பேசும்பொழுது, அந்த அறையில் ஒரு மாற்றம்!

நாங்கள் பேசிக்கொண்டிருந்தது கணவனின் அண்ணன் பையனைப்பற்றி. அந்த பையன் இறந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் அவனுடைய பகைமை சுபாவத்தினால் குடும்பத்தில் பல பிரச்னைகள். இவர்கள் மனதில் அந்த ஆதங்கம் இன்னும் ஆழமாகவே இருந்தது. அதனாலையோ என்னவோ அவனைப்பற்றிப் பேசும் பொழுது அந்த அறையே இருண்டதுபோல இருந்தது. அதை நான் அப்பொழுது கவனிக்கவில்லை. இந்த விஷயத்தை முடித்து சுமுகமாக பேசிக்கொண்டிருந்தப்பொழுது ஒரு நிழல் நகர்ந்தது போல வெளிச்சம்!

இதுமாதிரி எனக்கு இதற்க்கு முன்னால் நடந்ததே இல்லை. ஆனால் யாரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமோ, அவனைப்போல ஆளைப்பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை. நம்மை சுற்றி ஆத்மாக்கள் இருக்கின்றன என்கிறார்களே! அவனுக்கு தெரிந்திருக்குமோ, அவனைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று?

No comments:

Post a Comment