Friday, October 21, 2011

Mazhaikaala Megangal

வெளியில் எட்டிப்பார்க்கும் பொழுது அப்படியே பிரமிப்பில் உறைந்துபோனேன் நான். ஹெலிகாப்ட்டர் பூச்சிகள் அங்கே பெரிதாக வளர்ந்திருக்கும் மரத்தை மேகம்போல் சுற்றி வந்தன. சில நாட்களாகவே அங்கு பட்டாம்பூச்சிகளையும் கண்டு வருகிறேன். இன்று காலை, இரு கருங்குயில்கள் எதோ வாக்குவாதம் செய்வதுபோல் கத்திக்கொண்டிருந்தன. நடுவில் இன்னொரு குயில் - பெண்குயிலோ  - கூடவே எதோ தான் நினைப்பதையும் சொல்லிக்கொண்டிருந்தது.

சில நேரங்களில் அந்த கதிரவன் மேகங்களுடன் சேர்ந்து எவ்வளவு கோலங்களை வானத்தில் இடுகிறான். இப்படி ஒரு அழகை கண்டு கவிஞர்கள் ஏன் கவிதை எழுதமாட்டார்கள்! இந்த நேரத்தில் தோணும், இந்த டெட்லைன் ரொம்ப தேவையா நம் வாழ்க்கைக்கு! எல்லாத்தையும் விட்டு, வானத்தின் கீழே,  அந்த மேகங்களிலேயே மிதந்து செல்லலாமே, கற்பனை லோகங்களுக்கு!

No comments:

Post a Comment