Monday, November 28, 2011

எதற்கு விதிவிலக்கு

பணக்காரன் மகன்
வெளிநாட்டில் வேலையாம்
உள்நாட்டில் வசிக்கும் தந்தைக்கு
சோறு போட முடியலையாம்


அவன் எனக்குச் செய்தது
தந்தையின் கடமைத்தானே!
எனக்கு தன் சொத்தைக்கொடுப்பதும்
இந்நாட்டின் முறைதானே!

கூட்டை விட்டுப்பறவை
பறப்பது இயற்கைத்தானே
நான் செய்வதை மட்டும்
யாவரும் பழிப்பானே!

என்று கேட்கும் அவனுக்கு
இன்று ஒரு சட்டம் வருவது
நம் கலாச்சாரம் என்ற பெருமைக்கு
பெரிய ஒரு இகழ்ச்சித்தானே!

அடுத்து வரும் நாட்களை
நினைத்து மனம் கலங்குமே!
குழந்தைகளை வளர்ப்பதற்கும்
ஒரு சட்டம் வந்துவிடுமே!


நம் முன்னேற்றத்திற்கு
மேல்நாடு வழி காட்டி
அதனை பின் பற்றும் நமக்கு
இதில் ஏன் விதிவிலக்கு?




Sunday, November 27, 2011

மனதில் ஆடும் நிழல்கள் - சிறுகதை

தாயின் விவாதமும் சரிதான். "வயதாகிக்கொண்டே போகிறது, இன்னும் எத்தனை வயது வரில் தான் கல்யாணத்தை ஒதுக்குவது?"

"வேலை..." என்று ஆரம்பித்தாலே அவள் தாய் சீறுவாள். "வேலை முக்கியம்தான்! ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது! குடும்பம், குழந்தை என்று வேண்டாமா?"

அவள் வாயை மூடிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள்.

"இன்னிக்கு சீக்கிரம் வா. வீட்டிற்கு சிலபேர் வருகிறார்கள்."

அவள் தாயை முறைத்துப் பார்த்தாள். தாய் அவளை கண்டுகொள்ளவில்லை.

**

"ஊருக்குப்போய் உன்னை காண்டாக்ட் செய்கிறேன்," என்றுச்சொல்லிச் வடக்கே சென்றவன் இடமிருந்து ஒரு தகவலும் இல்லை. எதோ ஒரு மெயில் மட்டும் வந்தது - எக்கச்செக்க வேலை என்று.

எதை வைத்து அவளும் காத்திருந்தாள்? அவன் என்ன ஐ லவ் யு சொன்னானா, கட்டி முத்தமிட்டானா, இல்லை மணம் செய்துக்கொள்கிறேன் என்றானா? இவளாகவேத்தானே நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்தாள்? அவன் புன்னகைத்தது தனக்காகத்தான் என்று? அவன் வேலையில் ஒரு  சந்தேகம் கேட்டால், தன்னுடன் பேசுவதற்கு என்று? வண்டியில் கொண்டு விடுகிறது ஏதோ ஒரு தனிப்பட்ட சந்தர்ப்பம் ஏற்ப்படுத்திக் கொள்வதற்கு  என்று?

எதற்காக காத்துக் கொண்டிருகிறாள் இவள்?

அவள் சீக்கிரம் திரும்புவதைக் கண்டத்  தாய் முகம் மலர்கிறாள். பெண்ணை அழகாக அலங்காரம் செய்கிறாள்.

வரன் தன் குடும்பத்துடன் வருகிறான். கம்பீரமாக இருக்கிறான். நல்ல வேலையில் இருக்கிறானாம். சிரித்தமுகம், சுலபமாக பழகும் சுபாவம்.


ஆனால் அவள் மனம் ஏன் அவனுடன் வந்திருக்கும் தம்பியையே நாடுகிறது?

"ஏய்! எப்படி, ஆச்சரியமா இருக்கா என்ன பார்த்து? நீதான் பெண்ணுன்னு தெரிஞ்சதும் ரெடி ஆயிட்டேன்," என்று அவன் சொன்னப்பொழுது ஏன் யாரோ தன்னைக்கத்தியால் கிழிப்பதுப் போல ஒரு எண்ணம்?

"இந்த வரன் வேண்டாமம்மா," என்று தாயிடம் சொல்கிறாள். ஏன், என்ன கொறச்சல் அவனுக்கு என்ற பொழுது, என்ன சொல்வது என்று தெரியாமல் திணறுகிறாள்.





Tuesday, November 22, 2011

இந்தகாலத்துப்பசங்க - II

அன்று முதல் பாகம் ஒரு புலம்பல். இன்று, பெருமை.

ஒரு பள்ளியில் (ஒமேகா) நேற்று நடனப்போட்டி. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குழு அமைத்து நாட்டுப்புற நாட்யங்கள் ஆட வேண்டும். அவர்களே பாட்டைத்தேடி, தானே அதற்க்கு நடனத்தை வடிவமைத்து, வேண்டிய உடையை தயார் செய்ய வேண்டும்.

முதலாக பத்தாம் வகுப்பினர் வந்தனர். ஆஹா என்று நானும் இன்னொரு ஜட்ஜும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவர்கள்த்தான் நன்றாக ஆடினார்கள் என்றுப்பார்த்தால்,  இன்னும் கீழ் வகுப்புகளின் புதுமைகள் இன்னுமே இன்ப அதிர்ச்சியை கொடுத்தன!

இன்டர்நெட்டின் மகிமையை இங்கு நான் எப்படிச்சொல்லாமல் இருக்க முடியும்? அதைக்கண்டுத்தான் மெக்ஸிகோ போல நாடுகளின் நாட்யத்தை மட்டும் இல்லை, நமது நாட்டின் வெவ்வேருப்பகுதிகளில் இருந்தும் நாட்யங்களை ஆடின இந்த பசங்கள். போய் வந்து தலைவலியை எதிர்பார்த்த எனக்கு இது ஒரு பாடமாக இருந்தது.

Sunday, November 20, 2011

புள்ளிகள்

சேர்ந்திருந்தால் அழகான கோலம்
தனித்தனியாகவும் பார்க்க நேரும்
ஒரு ஜாலம் பின்னும் அற்புதம்
சிறியது பெரியது என்று பலவகையும்!

சிறிய புள்ளிக்கு என்ன கோவம்?
பெரிய புள்ளி ஆக வேண்டும் என்ற ஆர்வம்!
இப்படியும் ஒரு ஆர்வம் ஏநாம்?
உலகில் எல்லாப்புள்ளிகளும் தானே வேண்டும்

ஆனால் பெரிய புள்ளி போடும் சத்தம்
அப்பப்பா பூமி தாங்குமா இந்த யுத்தம்!
நீயா நானா என்று எப்பொழுதும்
மற்றவனை கீழே தாழ்த்தும் வேகம்!

இதை கண்டா ஏங்கும் இந்த மனம்?
மானம் காப்பாற்றி இருக்கும் நேரம்
சிறியது பெரியது என்று ஏன் இந்த வஞ்சம்
இருப்பதை நினைத்து திருப்தி படு நீயும்.



Saturday, November 19, 2011

Lasting Impressions: The Circle

Lasting Impressions: The Circle: I admired the circle Perfect and round And stepped in to see It circle around. No beginning Nor an end No confusion Joined from end ...

Friday, November 18, 2011

இந்தக்காலத்துப்பசங்க!

 ஒரு பெரிய தொழிலதபரைப் பேட்டிக் காணச் சென்றிருந்தேன். என்னுடன் மூன்று இளைஞர்களும் இருந்தார்கள். முதலில் அந்த அதிபரை தனியாக சந்தித்து  என்ன பேசப்போகிறோம் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன். வீடியோ பிடித்தார்கள். எல்லாம் முடிந்தபிறகு அவர் ஒரு இரண்டு நிமிடம் நின்று பேசினார். "நீங்கள் எல்லோருமே இந்த தொழில் குழுவை சேர்ந்தவர்களா?" என்று கேட்டார்.

"இல்லை" என்று மூவரும் பதிலளித்து சும்மா இருந்தனர். அவர் தயங்கி நின்றார். நான் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே நினைத்துக்கொண்டேன் - இந்த சில நல்லப்பழக்கங்கள் கூட இந்த காலத்துபசங்களுக்கு இல்லையே!

வணக்கம் சொல்வது, சிரித்துப் பேசுவது, போய்வருகிறேன் என்று சொல்லுவது போல பழக்க வழக்கங்கள் மறைந்துக்கொண்டிருக்கின்றனவா என்று யோசிக்க தோன்றுகிறது. எப்பொழுதும் இந்த கம்ப்யூட்டர் எதிரில் உட்கார்ந்தால் எப்படி மனிதர்களுடன் பழக கற்றுக்கொள்ள முடியும்? பெரியவர்கள் கூட இந்த சின்ன விஷயங்களை சொல்லிக்கொடுப்பதில்லையா?

நாம் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்தகொள்ள கூடியது ஒரு புன்முறுவல் தான். இதற்க்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்!

Wednesday, November 16, 2011

இப்படியும் ஒரு ஆசை


மேம்பாலம் திறப்பு விழா. அந்தத் தெருவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை அன்று காலை. காலை நேரத்தில் இந்த உபத்த்ரவமா என்று மக்கள் மத்தியில் அலுப்பு. தட்டிக்கேட்க யாரால் முடியும், என்ற சலிப்பு. தட்டிகேட்க நேரமும் இல்லை, கேட்டு செயல் பட ஆட்களும் இல்லை.

இந்த பாலம் கட்டுவதற்கு பல லட்சங்கள் செலவழிந்ததாக பேச்சு. கட்டுவதற்கா இல்லை யார் குடும்பமோ பிழைப்பதற்கா என்று ஒரே நக்கல். எப்படியோ ஒன்று, இத்தனை நாள் அந்த சாலை பயனில்லாமல் இருந்தது. இனி பார்ப்போம், இந்த மேம்பாலத்தினால் என்ன பயன் என்று ஒரு ஆர்வம்.

திடீறன்று ஒரே பரபரப்பு! என்னப்பா, திறந்தார்களா?

ஆமாம், ஆனால் திறந்த உடனே எதோ விபத்து. எப் எம் போடு?


"மக்களே, இப்பொழுதே திறந்த மேம்பாலம், மந்திரியும் அவர் பாதுகாப்பு அணியினரும் அதை திறந்த பின் அதை கடந்து செல்ல, அந்த பாரம் தாங்காமல் அந்த மேம்பாலம் பொத்தென விழுந்தது என்று இப்பொழுதுதான் செய்தி வந்தது. மந்திரிக்கு காயமா என்று தெரியவில்லை."


ஊரே வாய் பொத்தி இருந்தது - கடவுளுக்கே போருக்க வில்லையா இவர்கள் செய்யும் அட்டூழியம்!

இப்படி எல்லா தவறுகளுக்கும் கண்ணெதிரில் தண்டனை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!








Monday, November 14, 2011

Lasting Impressions: Warning Bells

Lasting Impressions: Warning Bells: Yesterday's newspaper said: * Sale of two wheelers in rural areas coming down because of dropping purchasing power. * Kingfisher plunging...

Sunday, November 13, 2011

குசேலர் - சுதாமா

சுதாமாவின் மனைவி அவலை கட்டிக்கொடுக்கிறாள் 
இந்த கதை கேட்டு/படித்து வளர்ந்திருக்கிறேன். ஒரு பிடி அவலைத்தின்ற ஸ்ரீ கிருஷ்ணா, பதிலுக்கு தன் பால்ய ச்நேஹிதன் குசேலரின் வாழ்க்கையையே மாற்றினார் என்று. ஏழையாக இருந்த அவனை மதித்து, வரவேர்த்து அவர் கொண்டு வந்த அவல் அவருக்கு தேவாம்ரிதமாக இருந்தது.

குசேலர் தான் யாச்சகனாக வந்திருப்பதை கிருஷ்ணரிடம் சொல்லாமல் அவர் திருப்தியாக பருந்துவதையே கண்டு மகிழ்ந்து வேறெதுவும் கேட்காமல் திரும்பிவிடுகிறார். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. வீடு மாளிகையாக மாறிவிட்டது, வறுமையில் ஏங்கிய மனைவி, குழந்தைகள் பளபளவென ஜொலிக்கிறார்கள்.


இதை நான் நடனத்தில் சஞ்சாரி பாவமாக செய்திருக்கிறேன். மற்றவர்கள் ஆடியும் பார்த்திருக்கிறேன்! ஒவ்வொருமுறையும் என் கண்களில் தண்ணீர் வந்துவிடும்.

என்ன ஒரு தத்துவம் - குசேலர் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தன் நண்பன் என் சொல்லக்கூடும் பரமாத்மாவிடம் ஒன்றும் கேட்கவில்லை. தன்னிடம் இருப்பதையே கொடுக்கிறான்.


"இதுதானா!" என்று இளக்காரமாக பாராமல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பதிலுக்கு சுதாமா நினைக்க முடியாத அளவுக்கு அவருக்கு கொடுக்கிறார். கேட்டிருந்தால் கேட்டதை மட்டும் தான் கொடுத்திருப்பார்!


கேட்காமல் பெற்றதால் குசேலருக்கும் என்ன பெருமை - சந்தோசம்.


நம்பிக்கை - நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும், முடிந்த அளவு கொடுப்போம். எவ்வளவு எளிதாக இந்த கதை இந்த பாடத்தைக்கர்ப்பிக்கறது! கற்றுக்கொள்ள நாம தயாரா?



Friday, November 11, 2011

Lasting Impressions: Siblings

Lasting Impressions: Siblings: Sham stood at the entrance, in sparkling white pajama kurta, accepting condolences. He blinked as he saw his aunt come up with a stricken lo...

Tuesday, November 8, 2011

Chinthanaiyilla Manam

அலைமோதும் மனதில்
இன்று நிலவியது நிசப்தம்
சுற்றும் முற்றிலும்
பரவியது அமைதி

இதைத்தானே தேடி
அலைந்தது நெஞ்சம்?
இன்று அது கிடைத்தும்
ஏன் இப்பொழுது கொஞ்சம் 

துலைந்து போனாற்போல்
ஒரு கலக்கம்?
பெச மறந்தாற்போல் 
ஒரு  மயக்கம்?

இந்த அமைதியை 
அனுபவித்து
மனதின் தவிப்பை 
விட்டுவிட்டு 

இதமான இந்த தருணத்தில் 
நீந்தி களைப்பாறு 
சுகத்தை ரசித்து
நிம்மதியை நீ நாடு 

Thursday, November 3, 2011

Lasting Impressions: Peeling the Layers - Meluha

Lasting Impressions: Peeling the Layers - Meluha: I think no Indian story, especially those on historical/mythological characters, can ever have just one layer. The Immortals of Meluha is no...

Tuesday, November 1, 2011

Yanthiram

மனிதன் தன்னைப்போல வேலை செய்ய யந்திரங்கள் உருவாக்கப்போகிறான் என்று சொல்லும் பொழுது, சிட்டி மாதிரி ரோபோவைத்தான் நினைத்துப்பார்க்கிறோம். ஆனால் யோசித்துப்பார்த்தால் நாமே ரோபோ ஆகி விட்டோமோ என்று தோணுகிறது.

நம் மன நிலையை குறிக்கும் கண்களை நாம் கறுப்புக் கண்ணாடிகளால் மூடுவது  மட்டும் இல்லாமல் நம் மனதையே மூடி விட்டோம். குளிர் பொட்டிக்காக வீட்டு ஜன்னல் கதவுகளை மூடி சுகமாக அனுபவிக்கும் பொழுது, வெளியில் என்ன நடந்தால் என்ன என்று தன்னை மற்ற மனிதர்களிடத்தினில் இருந்து துண்டித்துவிட்டோம். ரோட்டில் செல்லும் பொழுது காரில் பறக்கும் பொழுது உலகில் என்ன நடந்தால் என்ன, தன் வேலையை தான் பாட்டுக்கு செய்யும் நமக்கு மனித நேயம் இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது! சிட்டியை போல பல உண்மைகளை ஒப்பிக்க தெரிந்த நமக்கு அதை அனுபவிக்கமுடியுமா என்ற கேள்வி மனதை துளைக்கிறது. மற்றவனுக்கு பிரச்னை என்றால் எனக்கென்ன என்று எவ்வளவு அழகாக ஒரு ரோபோவைப்போல இருக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்!

ஆர்டிபிஷல்  இண்டலிஜென்ஸ் என்று நாம் புதுசாக எதையும் கண்டு பிடிக்கவேண்டாம். இருக்கும் புத்தியை யந்திரம் போல உபயோகிக்கும் நம் புத்திசாலித்தனமும் இயற்கைக்கு மாறாக இருப்பதால் இதுவும் செயற்கை தானே!