Saturday, April 29, 2017

பிழை காலம்

தன் சுகத்திற்கு 
ஏரிகள் அடைத்தோம்
காடுகள் அழித்தோம்
நதிகளை மாசுப்படித்தினோம்

மழை நீரை 
கடலில் இழந்தோம் 
ரோடுகள் போட்டோம் 
மண்ணை மறைத்தோம் 

காற்று, நீர் 
மண், மனம் 
எங்கும் விஷத்தைக் 
அள்ளி அள்ளிக் கலந்தோம் 

வானுக்கும் பூமிக்கும் 
இருக்கும் பந்தத்தைத் 
அறிவின்றி துண்டித்தோம் 
பிழைகள் குவித்தோம் 

புது வீட்டில்
குடி புகுந்தோம்
குடிக்க நீர் எங்கே என்று
வருந்தவும் செய்தோம்

வானத்தையும் பூமியையும் பழித்தோம்
தெய்வங்களையே சபித்தோம் 
தன் தவறுகளை 
என்றைக்கு உணர்வோம்?


1 comment:

  1. தவறுகளை உணரும்போது இயற்கை தண்டித்துவிடும்.

    ReplyDelete