கேள்விகளே இல்லை
கேள்விகள் கேட்க ஆசை
தேடி கிடைக்கவில்லை
தோண்டி எடுத்து தெரிந்துகொள்ள ஆசை
சொல்ல ஒன்றுமில்லை
வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்க ஆசை
கவிதைக்கு ஊக்கமில்லை
ஆனால் செய்யுளாய் பொழிய ஆசை
சிரிப்பதற்கு ஒன்றுமில்லை
நகைச்சுவை செய்து சிரிக்க வைக்க ஆசை
அழுவதற்கு நிறைய இருந்தும்
இருப்பதை எல்லாம் மறக்க ஆசை
வாழ்க்கை என்னவென்று
தெளிவாய் தெரிந்துகொள்ள ஆசை
எல்லாம் இருந்தும்
எல்லாவற்றையும் விட்டுச்செல்ல ஆசை
ஆசைகள் பல இருக்க
நிராசையில் மூழ்க ஆசை
பந்தங்கள் விரும்பும் மனதை
விடுவித்துக்கொண்டு பறக்க ஆசை
எல்லையற்ற ஆசையின்
எல்லையைத் தொட்டுவிட ஆசை.
No comments:
Post a Comment