Saturday, October 15, 2011

Setril Kaal, Vaanatthil Kann

வெய்யிலில் நின்று, குனிந்து வயலில் வேலை செய்யும் தன் தந்தையை பார்க்கும் சரவணனுக்கு மனதில் எதோ ஒரு ஏக்கம். குளிர்ந்த காரில் முதலாளி வந்து, வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நிலங்களை பார்த்து விட்டு, அங்கு வேலை செய்பவர்களுக்கு பத்து ரூபா ரொம்ப தாராளமாக கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு சென்றவரை அவனும் கவனித்துக்கொண்டிருந்தான். அவர் மகள் கலா வண்டியில்தான் உட்கார்ந்திருந்தாள் . காரின் எசியை பெரிதாக்கி, பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள். இவனை விட ஓரிரண்டு வயதுதான் அதிகமாக இருக்கும். பட்டிணத்தில்  படிக்கிறாள் என்று கேள்விப்பட்டிருந்தான்.

இவன் பக்கம் முதலாளியின் கண் திரும்பியது. "என்னடா? என்ன செய்யற?"

"படிக்கறேன்...அய்யா." அந்த கடைசி வார்த்தை அவனையும் மிஞ்சி ஒரு பழக்கத்தில்தான் வந்தது.

"படிச்சி என்ன கிழிக்கப்போற? வயல்லத்தானே வேல செய்யணம். உன் அய்யாக்கு உதவலாமில்ல?"

இவன் தலை குனிந்து பதில் பேசவில்லை.

அய்யாவும் வண்டியில் ஏறிச்சென்று விட்டார். அப்பொழுது கலா அந்த ரேடியோவுடன் இசைந்துப் பாடிக்கொண்டிருந்தாள். அவனுக்கும் இதையெல்லாம் அடையவேண்டும், அவன் தந்தை தாய் தங்கை இந்த சுகங்களை அடைய வேண்டும் என்றுதான் ஆசை... 

தானும் தந்தையை போல சேற்றில்தான் வாழ வேண்டுமா? இல்லை, அவன் இந்த வயலில் வேலை செய்யமாட்டான் என்று தீர்மானித்துக்கொண்டான்.

அவனைப்போல பல இளைஞர்களும் அவன் வகுத்த பாதையை கடைப்பற்றி இன்ஜினியரிங் படித்தனர்... அவர்கள் வாழ்க்கையும் மேன்பட்டன. ஆனால் என்ன, நம் நாட்டில் யாரும் பயிரிடத்தான் ஆளே இல்லை.

Tuesday, October 11, 2011

Padippathilirunthu Adutthakkattam

கதை புத்தகம் படித்தே வாழ்க்கையை ஓட்டுவதற்கு தயாராக இருந்த நான், இன்று நான் எழுதிய ஒரு கதை புத்தகம் வெளியிட்டு ப்ளிப்கர்ட் என்னும் சைடில் விற்பனையும் ஆகிறது என்று தெரிந்ததும் இருக்கும் குதூஹலம்! - 


இது ஒரு காதல் கதை... ஆனால் இதை எழுதினதே ஒரு பெரிய கதை! இந்த பாதை புதியது, அனுபவம் மிகவும் அற்புதமானது. தன் பிள்ளையை கையில் ஏந்துவது எவ்வளவு சுகமோ, அத்தனை ஆனந்தம், அத்தனை சுகம் இதிலும் உள்ளது!

நம் பேரை அட்டையில் பார்ப்பது எவ்வளவு திருப்தியாக இருக்கிறதோ, அவ்வளவே திருப்தி இதை படிப்பவர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்!

உங்கள் நல் வாழ்த்துக்களை கோரி இன்றைக்கு விடை பெறுகிறேன்.

Lasting Impressions: A Game of Elastic

Lasting Impressions: A Game of Elastic: Suddenly, I remembered this game I used to play as a kid. I realised that I had played this when under 13, in Delhi, but never in Calcutta. ...

Lasting Impressions: A Game of Elastic

Lasting Impressions: A Game of Elastic: Suddenly, I remembered this game I used to play as a kid. I realised that I had played this when under 13, in Delhi, but never in Calcutta. ...

Monday, October 10, 2011

Nyabagangal

சிறிய துளிகள்
பொட்டுப்போல் மேலே
சொட்டுச்சொட்டாய்
விழுந்து எழுப்ப
சிறிய சிறிய நினைவுகள்

அந்த அரக்கு நிற பேனா
தோட்டத்தில் காய்க்கும்
கொய்யா, மாதுளை
பட்டுப்போன ரோஜா செடி
மண்புழு, அதை மூடிய கல் தரை

அண்ணாவுடன் மோதல்
அம்மாவிடம் சண்டை
அப்பாவிடம் ஒரு துளி பயம்
இடியிநோசை கேட்டு
சுருண்டு படுத்தல்

தெருக்களில் திரிந்து
வீட்டை மறந்து
நண்பர்களுடன் விளையாடி
பேசி, நடந்து
மெதுவாக வீடு திரும்பி

பள்ளியில் கழித்து
பேருந்தில் கதை பரிமாரித்து
தூங்கி வழிந்து
பிடித்துக்கொள்ளாமல்
நின்று, பாடி, விளையாடி

கரும்புத்துண்டுகளை
தனியாக ரசித்து
டிவி முன் வாயை பிளந்து
பட்டாசு வெடித்து
வேடிக்கை பார்த்து

ஒரு சின்ன சொல்
ஒரு பறக்கும் கார்
பெண்ணின் குரல்
மகனின் சிரிப்பு
போக்கில் விழுந்த வார்த்தை

எது எதை தீண்டும்
எதை நினைவூட்டும்
எந்த ஞாபகத்தில்
மிதக்க வைக்கும்
அது அறியாததே ஒரு ருசி

அன்று துன்பம்
இன்று அதே நினைவு
ஒரு இன்பம்
அதை பிடித்துக்கொண்டு
பறக்கும் நான் 

இன்றிலிருந்து விடுத்து
நேற்றில் மிதந்து
லேசான நெஞ்சில்
நினைவுகளை பொருத்து
பறக்க வைக்கும் ஞாபகங்கள்.






Thursday, October 6, 2011

Lasting Impressions: Growing Up : Part III

Lasting Impressions: Growing Up : Part III: When I reach out the top shelf to take out the box with Bournvita packet in it; when I call up the grocers to place my order for the month;...

Engum Iruppaan

நம் நாட்டில் பல விஷயங்கள் வருந்தத்தக்கவைதான். எனிலும் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் விஷயம் நாம் எதிலும் கடவுளைக்காண்பதுதான். மரம், செடி கோடி, மிருகம், யாதாயினும் அதை ஓர் கடவுளின் வாஹனாமாகவோ அல்லது கடவுளின் ஒரு வடிவமாகவோ நினைத்து அதற்க்கென்றொரு நாள் குறித்து அதை வழிபடுவது ஒரு விதத்தில் எல்லா உயிரினங்களிலும் அந்த கடவுள்  இருக்கிறான் என்பத நமக்கு உணர்த்துகின்றன. ஒரு மரத்தை வெட்டினால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதை ஈடு செய்யும்படி பத்து மரங்களை நடுவார்களாம்! இது நம்மூரில் மட்டும் இல்லை, பர்மாவில் கூட இந்த பழக்கம் இருந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.

ஏன் உயிர் ஜீவன்கள் மட்டும் இல்லாமல் நமக்கு உதவும் ஆயுதங்களுக்கு கூட மதிப்பு கொடுக்கும் ஒரு பண்டிகை! எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்வதற்கு உதவும் எதுவானாலும் அதற்கு இந்த நாளில் கும்புடு போட்டு அதை கடவுளாக தொழுகிறோம். வாயில்லை, பேச்சுமூச்சுக்கிடையாதென்றாலும் அதில்லாமல் நமக்கு ஏது வரும்படி? அதை நினைவில் வைத்து, அதிலும் கடவுளை காணும் மனப்பான்மை இருக்கும் நாட்டில் பிறந்திருக்கிறோம் என்பது பெருமையாகத்தான் இருக்கிறது!

ஆனால் என்ன, இந்த காலத்து மாடர்ன்/சயண்டிபிக் சிந்தனைகள் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன, ரொம்பவே சிந்திக்க வைத்து சில சின்ன சின்ன, அழகான விஷயங்களை கொச்சைப்படுத்துவது மற்றும் இல்லாமல் அதை தூக்கி எரிய வைக்கின்றன. ஆனால், அதனால் கஷ்டப்படுவதும் நாம்தான்! மாட்டில் கடவுள் இருக்கிறானா என்று கேட்பது தவறில்லை. ஆனால் அதையும் ஒரு கருவியாக உபயோகிப்பதுதான் தவறு. இடம் வேண்டும், அதனால் காட்டை அழித்து, உணவைத் தேடி வரும் மிருகங்களை அழித்து, இதில் என்ன பாவம் என்று வாதாடுவதுதான் தவறு.

இந்த சிந்தனை மாறி மறுபடியும் எல்லா ஜீவன் கருவிகள் எல்லாவற்றிற்கும் கொடுக்க வேண்டிய மரியாதை தந்தால் தான் நாமும் வளமுடன் வாழ முடியும்.