மவுண்ட் ரோட்டில் இப்படி ஒரு இடமா என்று எல்லோரும் கேட்கும் பொழுதே தெரிந்திருக்கணம், யார் கண்ணாவது பட போகிறதென்று. பல்லை இளித்து, ஆமாம் என்று பெருமையாக சொல்லுவதற்கு பதில், அதை பற்றி குறையாக பேசியிருக்கணம்.
ஈ தொல்லை, பறவைகளின் கூச்சல், அணில் அடிக்கும் லூட்டி என்று அடுக்கிக்கொண்டே இருந்தால், ஐயோ பாவம் என்று நினைத்திருப்பார்கள்.
வாங்க மான் பார்க்கலாம், அதோ பாரு மரம்கொத்தி, மீன்கொத்தி அந்த மரத்தில் கீழ் கிளையில் தெரிகிறதா, அதோ குயில் பாட்டு, பாம்பு கூட வரும், நின்னு பார்கறையா?
யாராவது கேட்டார்களா? எதற்கு வீண் ஜம்பம், இப்போ எல்லாம் போக போகிறதே என்ற வருத்தம்? இன்று சென்னைக்கு வேண்டியது மெட்ரோ ரயில். ஊரே டிராபிக் ஜாமில் சிக்கி இருக்கும் பொழுது, உனக்கு மட்டும் என்ன வேண்டியிருக்கிறது, மரமும், மான்களும், பறவைகளும்?
ஊரோடு ஒத்து வாழ்.