Saturday, June 25, 2011

Vandalur Uyiriyal Poonga - Oru Anubavam


நண்பனைத்தேடி
 பல அனுபவங்கள் என்றே சொல்லலாம். இன்று, பல வருடங்களுக்கு பிறகு என் குழந்தைகளுடனும் கணவனுடனும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்றேன். சில உண்மைகளை கண்டேன்.

என் மகன் பூனை ஜாதி என்றே நம்பியிருந்தேன். குளிக்கப்பிடிக்காது. ஏன், முகத்தில் தண்ணி பட்டாலே பிடிக்காது. ஆனால் பூங்காவில், முதலைகளைக்கண்டு அப்படி ஒரு உற்சாகம்! நீர்யானையை கண்டு அப்படி ஒரு சந்தோஷம். 

அதை அடுத்து ஒரு சிறிய நீர்யானை வைத்திருக்கப்பட்டிருன்தது. அது, வரும் மனிதர்களை பொருட்படுத்தாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுவரோரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது. என் மகன், "ஹல்லோ எப்படி இருக்க?" என்று அதிடம் பேச, அது எங்கேயோ கேட்டக்குரல் போல தலையை தூக்கி பார்த்தது!

சிறிது தூரம் சென்று, என் கணவர் அதை படம் பிடிக்க பார்த்தார். ஆனால் அதுடைய முகம் தெரிய வில்லை. என் மகன் அங்கிருந்து கத்த, அந்த நீர்யானையும் குரல் வரும் பக்கம் நடந்து வர ஆரம்பித்தது.  

என்ன உறவோ என்று புரியாமல் நாங்கள் முழித்தோம். அவனோ மிகப்பெருமையுடன் எங்களை பார்த்தான்.

**

புலி மேலும் கீழும் நடந்துக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து ரசிக்க வேண்டியதுதானே? ஒருவர் அதி புத்திசாலித்தனமாக  கை தட்ட ஆரம்பித்தார். அது தன்னை பார்க்க வேண்டுமென்று. ஏன்யா, இதையே காட்டில் போய் செய்ய வேண்டியதுதானே? நன்றாகவே கண்டு கொள்ளும். 

**

சோம்பேறி கரடி சீசாவ்
வெளையாடிக்கொண்டிருக்கிரது
கரடிக்கூண்டில் - கூண்டஅல்ல, வேலிப்போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஒரு மரக்கட்டை ஒரு மரக்கிளை நடுவில் இருந்தது. அது மேல் ஒரு கரடி சீசாவ் ஆடியது. அதை இன்னொரு கரடி கண்டு கொண்டு தானும் ஏருவேன் என்று, முதலது இறங்கியதும், இதுவும் சீசாவ் ஆட தொடங்கியது. இன்னொரு கரடி தனியாக நின்று ஆடிக்கொண்டிருந்தது. என்ன தோணுமோ இந்த மிருகங்களுக்கு - பார்க்க சிரிப்பாகவும் இருந்தது, சிந்திக்கவும் வைத்தது.

No comments:

Post a Comment