Saturday, June 18, 2011

Virundaali - Sirukathai

"வாங்க," வரவேற்றாள் இல்லத்தரசி.

சிரித்துக்கொண்டே நுழைந்தார் விருந்தாளி. "நல்லா இருக்கிறீங்கள?" என்று விசாரித்தார் அவர்.

தலையாட்டிக்கொண்டே அவருக்கு உட்கார அமர்க்கையை முன்னே நகர்த்திநாள்  அவள். வீட்டை அவர் ஏறிட்டு பார்த்தார். "நன்றாக இருக்கிறது. எவ்வளவு?" என்று கேட்டார்.

அவள் முகம் சிணுங்கினாள். என்ன கேள்வி இது! எவ்வளவாக இருந்தால் இவருக்கு என்ன? அதை கண்டவுடன் அந்த மனிதனுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. "தண்ணீ" என்று தயக்கத்துடன் கேட்டார்.

அவள் விருட்டென்று உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்தாள்.  "நான் சற்று வெளியே போக வேண்டும். நீங்கள்...?"

அவர் சட்டென்று எழுந்தார். "நானும் தான்" என்றார்.

"வந்த வேலை என்ன என்று...?"

"இல்லை, இருக்கட்டும். ஒன்றும் அவசரம் இல்லை," என்று அவர் சென்று விட்டார்.

அவள் நிம்மதியான பெருமூச்சு விட்டாள். எங்கே இந்த விருந்தாளி பழைய கதை பேசிக் கொண்டிருப்பாரோ என்ற அவள் பயம் நீங்கியது. அவளுக்கு கஷ்ட காலத்தில் அவர் இருந்த இடத்தில் இவளும் குடியிருந்தாள். இப்பொழுது, அவள் கணவருக்கு நல்ல வேலை, அலுவலகத்தில் வீடும் கொடுத்தார்கள். இந்த மாதிரி இடத்தை எல்லாம் அந்த மனிதன் முன்னே பார்த்தே இருந்திருக்க மாட்டார். இங்கே வந்து கழுத்தருப்பாரோ  என்ற பயம் இனி இல்லை என்று நம்பிநாள். நிம்மதியாக பகல் தூக்கம் போட உள்ளே சென்றாள்.

அவர் தான் வாயை மூடிக்கொண்டிருந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் வேகமாக நடந்தார். பையனுக்கு வேலை கேட்க்கும் வாய்ப்பை துலைத்தது  பற்றிய வருத்தம் அவரை வாட்டியது.  


1 comment: