தன் கணவனை முறைத்துப் பார்த்தாள் அவள். "எப்பொழுதுமே நான்தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா? ஒரு முறையாவது என் ஆசைப்படி நடந்துகொண்டிருக்கயா?"
"ஏன் அப்படி சொல்ற!" அவன் பதிலுக்கு கோவம் கொண்டான். "ஒனக்கு எப்பவுமே திருப்தி கடயாது! நீ உன் பிரெண்ட்ஸ பார்க்க போகணம்ங்கரச்சே நான் ஒன்ன கொண்டு போய் விடலையா? எனக்கு அன்னிக்கி எவ்வளவு வேல இருந்துது தெரியுமா? டிரைவர் மாதிரி என்ன ட்ரீட் பண்ணிட்டு இப்ப இப்படி ஒரு கேள்வியா?"
"என்னையும் தான் ஒரு குக் இல்ல மெய்ட் மாதிரி நெனைக்கற. நீ வீட்ல நோழயரச்சே காபி கைல கொடுக்கணம். இங்க அங்க போட்டுப்போற சாமான் எல்லாம் பொருக்கி வெக்கணம். உங்க வீட்லேர்ந்து உறவுக்காரங்க வந்தா சமைச்சுப் போடணம்! இதுக்கா நான் இன்ஜினியரிங் படிச்சேன்?"
"ஏய், நானா ஒன்ன வேலைய விட்டுட்டு வீட்ல ஒக்கார சொன்னேன்? நீதான் வேலைக்கும் போய் வீட்டையும் பாத்துக்க முடியலன்னு சொன்னே!"
"ஏன்னா நீ எனக்கு ஒரு ஒத்தாசையும் செய்யல வீட்ல! எப்படி எல்லாத்தையும் என்னாலையே பார்த்துக்க முடியும்? ஆள வெச்சுக்கலாம்னா அதுக்கும் ஒதுக்க மாட்டேங்கற!"
"ஆள் இருக்கறதெல்லாம் அள்ளிண்டு போய்ட்டா? அப்பறம் யார் திண்டாடறது?"
"கூழுக்கும் ஆச, மீசைக்கும் ஆச" என்று அவள் தன் தாடையை தோளில் இடித்தாள்.
"எத்தன பொம்பளைங்க வீட்டையும் பாத்துண்டு வேலைக்கும் போறாங்க?"
"அவங்க புருஷன் எல்லாம் எப்படி தாங்கறாங்க!"
"ஏதோ நான் தாங்காத மாதிரி!"
"எப்பவும் நீ நெனைக்கறதுதான் சரி! எனக்கு என்ன ஒத்தாச செஞ்சிருக்க?"
ஓ - இந்த பாய்ண்டில் தான் நாம் நுழைந்தோமோ! இப்படியே சுற்றி சுற்றி எத்தனை நேரம்தான் இந்த சண்டை தொடரும்? விட்டுக்கொடுங்கப்பா! அப்பத்தான் வாழ்க்கை சக்கரம் சுற்றும்!

No comments:
Post a Comment