ஆர்வத்துடன் நீட்டினான் அவன் தான் எழுதிய கட்டுரையை. "படித்துப்பார்த்து சொல் எப்படி இருக்கிறது என்று?" என்று ஆவலாக கேட்டான் அவன்.
இவன் அதை வாங்கி கொண்டு, "ம்ம்ம், நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்," என்றான் உர்ச்சாகமின்றி. வேலை
செய்யும் இடத்தில் இதற்க்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கும்!
சிறிது முகம் சுருங்கினாலும், நேரத்தின் பதிப்பை அறிந்த அவன், "நான் வெயிட் செய்வேன். உன் வ்யுஸ் கேட்டப்பரம் தான் பத்திரிகைக்கு அனுப்புவேன்," என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.
இவன் ஒரு வாரம், இரு முறை ஞாபகம் படுத்திய பிறகு தான் அந்த கட்டுரையை படித்தான். ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக சொன்னான், "தாட் ப்ளோ இருக்கு... ஆனா புதுமையா ஒண்ணுமே சொல்லலையே?"
அவன் முகம் வாடியது. "நீ சொல்வது சரி தான்," என்று அவன் தன் கட்டுரையை வாங்கிக்கொண்டான். அவன் தலைமரைந்ததும், இவன் தலையில் அடித்துக்கொண்டான் "எல்லாரும் எழுத வந்திடறாங்க" என்று.
ஆறு மாதம் கழித்து அவன் மலர்ந்த முகத்துட்டன் எதிர்பட்டான். கையில் ஒரு காகிதம். "அண்ணே, என்னோட ஒரு புத்தகம் வெளி வரது. அதுல இந்த முன்னுறை எழுதறேன்... கொஞ்சம் படிங்க."
ஆச்சர்யமாக பார்த்தான் இவன். கையில் வாங்கிக்கொண்டான் அந்த காகிதத்தை. நெஞ்சில் குத்தியது போல இருந்தது.
"இந்த புத்தகத்தின் மூலாதாரமே என் அண்ணன் தான்" என்று இவன் பெயர் இருந்தது. மேலும் படித்தான். "எல்லாரும் எழுதுவதையே நீயும் எழுதாதே என்று அவர் வழி காட்டினார். அதிலிருந்து பிறந்த தேடல் தான் இந்த புத்தகம். அவர் அன்று என் கட்டுரையை போலியாக புகழ்ந்திருந்தால் நான் புதுமையாக எதையும் செய்திருக்க முடியாது..."
தான் வஞ்சனையுடன் சொன்ன வார்த்தையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அவன் காலில் விழ வேண்டும் போலிருந்தது இவனுக்கு.
Cool one !! again
ReplyDelete