என்னையே கரடி என்று சொல்லிக்கொள்ளும் நிலமைக்கு வரவல்லை இன்னும். ஆனால் இந்த சிந்தனை ஒன்று மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
இருவர் தோழர்கள். மூன்றாவது தோழன் அவர்களுடன் சேரும் பொழுது கலக்கம் ஏற்படுவது ஏன்? இது கணவன் மனைவி விஷயத்தில் மட்டும் அல்லாமல், நட்பில் கூட பாதங்கள் ஏற்படுத்துகிறது.
"உனக்கு அவன் சொன்னால் ஒசத்தி,அவன் தான் முக்கியம்" என்று டக்கென்று ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.
"அவள் உன்னை பத்தி என்ன சொன்னா தெரியுமா?" என்று வம்பு பேச தூண்ட வைக்கிறது.
"அவ எப்பவுமே ப்படித்தான். நான்தான் விட்டு கொடுக்கணம்," என்று குறை பட வைக்கிறது.
ஒரு நேரத்தில் நம்மால் ஒருவருடன் தான் நட்பு வைத்துக்கொள்ள முடியுமோ? அதை விட அதிக பேர்கள் இருந்தால் அது கட்சியாக மாறி விடுகிறதே! ஒரு வித அச்சம் - நம்மை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் - அந்த உறவை மாற்றி விடுகிறது. எவ்வளவு இருந்தும் என்ன, நமக்கு நம் மேலேயே நம்பிக்கை இருப்பதில்லையே! மற்றவர்கள் ஆமொதிப்பதற்கு தானே காத்திருக்கிறோம்!
Rightly said..
ReplyDeletekeep it up dear ....