கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மனிதனை குறிக்கும் பண்பாடு?
கருணை என்ற அந்த குணம்...
அதுவே அல்லவோ மணம் தரும்?
ஆறாம் அறிவு சிந்தனை செய்ய
அல்ல தீய வழிகளை கைப்பட?
மனிதனே படைப்பில் உயர்ந்தவன் என
நினைத்திருக்க இது விந்தை என்ன?
மிருகத்தை விட கொடுமை இவனை
அரக்கனை போல மாற்றிவிட!
மனிதத்தன்மையை தேடும் என்னை
அடி பைத்தியம் என்று கேலி செய்ய.
Sunday, December 23, 2012
Saturday, December 15, 2012
துப்பாக்கி கலாசாரம்
இந்த பயங்கரம் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிருது இந்தியாவில் இல்லை என்று நாம் பெருமை படலாம். ஆனால் மற்ற விபத்துகள் இங்கு தானே நடக்கிறது! ட்ரக் அடியில் மூன்று வயது குழந்தை, திறந்த கிணற்றில் குழந்தை பலி, பள்ளியில் தீயினால் குழந்தைகள் மரணம், வண்டி விபத்தில் குழந்தைகள் பலி... இப்படி பல பொறுப்பில்லாத மரணங்களின் கணக்கெடுத்தால், நாம் தான் பந்தயத்தில் வெல்வோம் என்பதில் சந்தேகமே இல்லை.
இன்னொரு விஷயம். அந்த ஊரில் இருக்கும் துயரங்களும், எதிர்பார்ப்புகளும், அக்கரையின்மயினால் வரும் மனோதத்துவ வியாதிகளும் நம் ஊரில் பரவ எத்தனை நாள் ஆகப் போகிறது? இப்பவே பெற்றோர்களுக்கு நேரம் இல்லாததால் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் கலாசாரம் மாறி, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் பொருப்பு தீர்ந்தது என்று நினைக்கும் இந்த காலத்தில், மகன் கேட்டான் என்று துப்பாக்கி மாதிரி வேற ஏதாவது வாங்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ எது செய்தாலும் தவறில்லை, மற்றவர்கள் செய்வதுதான் தப்புய என்று நாம் சொல்லி அவர்களுடைய சுய நம்பிக்கையை வளர்க்கிரோமாம். யாராவது நீ செய்வது தப்பு என்று சொன்னாலே கொலை வெறிதான் பொங்குகிறது. அடி, உதய், குத்து, கொலை என்று செய்திகள் தினம் பதிரிகயில் படிக்கிறோம். இதை நாம் இப்பவே தடுத்து, கருத்துடன் குழந்தைகளை வளர்க்கவில்லை என்றால், அமெரிக்கர்களாகவே மாறுவோம், சந்தேகமே இல்லை!

Saturday, December 1, 2012
கிராதகி
செய்கிறாயா அடிக்கட்டுமா!
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்
இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்
வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்
அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்
அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்
எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்
இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்
வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்
அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்
அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்
எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்
Sunday, November 11, 2012
பட்டாசு வைபோகம்
வெடிக்கு பயந்து, என்னிடம் இருக்கும் சக்கரம் புஸ்வாணம் எல்லாவற்றையும் வெளிச்சம் இருக்கும் பொழுதே ஏத்தி விட்டு, மற்றவர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது அறையில் கதவை சாத்திக்கொண்டு, காதலி மூடிக்கொண்ட நாளும் நினவிலிருக்கறது.
பிறகு கையில் ஊசிப்பட்டாசை கொளுத்தி வீரமாக எறிந்த ஞாபகமும் இருக்கு.
புச்வாணம் முகத்தில் வெடித்து கண்ணாடி சிதறியதும் ஒரு அனுபவம்.
அந்த வெடியை கொளுத்தி காதை மூடி தூர ஓடிய நினைவுகளும் முகத்தை மலரச்செய்யும்.
இப்பொழுது அடுத்த தலைமுறை மிக உற்சாகத்துடன் பட்டாசு வெடிப்பதை பார்க்கும் பொழுது, வருடத்தில் ஒரு நாள் அவர்களை தடுப்பதா என்ற ஒரு சிந்தனையும் மனதை தாக்குகிறது. நாம் வருடம் முழுதும் நம் சுற்று வட்டாரத்தை நாசம் செய்வதை விடவா இந்த குழந்தைகள் ஒரு நாளில் செய்து விடுவார்கள்?
அவர்கள் சுதந்திரமாக, ஜாக்ரதையாக பட்டாசு வெடிக்க இடம் விடாமல் கட்டிடங்கள் கட்டியது யார்? எல்லா இடங்களிலும் நடக்க கூட இடம் விடாமல் வண்டிகளை நிறுத்தியது யார்?

Friday, October 26, 2012
இது ஒரு டைம் பாஸ்
![]() |
நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்னாலிருந்து - "ஒரு மணிநேர கச்சேரி, 12 பேர்களாவது ஆட வேண்டும்... ஒரு 8 பாட்டுகள் இருக்குமா? கொஞ்சம் கிளாச்சிக்கல், கொஞ்சம் விறுவிறுப்பா சில பாட்டுகள் - இப்படி நல்ல ஒரு மிக்ஸ் இருக்கட்டும்," என்றெல்லாம் வறுத்தி எடுப்பார்கள். பிறகு, "ஆடுபவற்கள் எல்லாம் ப்ரொபெஷ்னல் தானே? ஓஹ்! இவ்வளவு கட்டுப்படியாகாதே! கொஞ்சம் கொறச்சுக்கொங்க! ஆனா 8 பாட்டாவது வேணும்... சரிதானே?" என்று பேரம் பேசுவார்கள். "அப்பொறம், உடை, ஆபரணமெல்லாம் புதுசா, பளிச்சுன்னு இருக்கணம்... சரியா?" இப்படி வேற ஒரு கவலை.
"அண்ணா! கால் சுளுக்கின்றிச்சு அண்ணா!" என்று ஆடுபவர்களில் ஒருவன் திடீரென்று ஜகா வாங்குவான். "ரொம்ப ஜுரம் அண்ணா..." என்று ஒருத்தி மூக்கை உருஞ்சுவாள். எப்படியோ ஒன்று, எல்லாரும் தயாராக நிற்கும் வேளையில், பார்பவர்கள் மெதுவாக, ஆடி அசைஞ்சு வந்து சேரும் வேளையில் நிகழ்ச்சி நடத்துபவர் மணிக்கட்டைப்பார்த்துக்கொண்டே - "சில பாட்டுகளை கட் செஞ்சிடுங்க. அடுத்தது சாப்பிட போவாங்க, பசிக்குதாம்" என்றும் பொழுது இதை ஞாபகப்படுத்தி, தானும் தன் குழுவும் கஷ்டப்பட்டதை ஒரு மாசம் ஒழைச்ச்சதை நினைத்தால் ச்சே என்றாகி விடும். முடிந்தவுடன், "அடடா, கிளாச்சிகால் பீஸ் இன்னும் ஒன்னு இருந்திருக்கலாமே," என்று வேற வேதனைப்படுவது போல ஒரு பாவனை!
அவனுடை நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பு இவ்வளவுதானா என்று தோணும். கலை என்ன ஒரு வெறும் டைம் பாசா என்றுக்கூட வெறுத்துப்போகும். ஆனால் பிழைப்பதற்கு இது ஒரே வழி... இதை தெரிந்துதானே இந்த வழியை நாம் மேற்கொண்டோம் என்ற விவேகம் அவனை இதை பொறுத்துக்கொள்ள செய்கிறது!
Thursday, September 27, 2012
வாழ்க்கைக்கல்வி - கவிதை
கல்லில் தடுக்கி விழுந்து எழுந்து
அதனை நகர்த்தி நடக்கக் கற்றேன்
மழையில் நடந்தால் இன்பம் எனினும்
ஒதுங்கி நின்று ரசிக்கக் கற்றேன்
வெயிலில் நடந்து வியர்க்கும் என்று
நிழலில் மறைந்து இயங்கக்கற்றேன்
சொல்லில் பொல்லாத நஞ்சைக்கேட்டு
அந்த வஞ்சனையை அஞ்சக்கற்றேன்
சிரிப்பே உயர்ந்த நகைஎன்றறிந்து
அதனை அணிந்து திருப்திப்பெற்றேன்
வாழ்க்கையே கற்ப்பிக்கும் பாடமென்று
அதனைப்படித்து வாழக்கற்றேன்
அதனை நகர்த்தி நடக்கக் கற்றேன்
மழையில் நடந்தால் இன்பம் எனினும்
ஒதுங்கி நின்று ரசிக்கக் கற்றேன்
வெயிலில் நடந்து வியர்க்கும் என்று
நிழலில் மறைந்து இயங்கக்கற்றேன்
சொல்லில் பொல்லாத நஞ்சைக்கேட்டு
அந்த வஞ்சனையை அஞ்சக்கற்றேன்
சிரிப்பே உயர்ந்த நகைஎன்றறிந்து
அதனை அணிந்து திருப்திப்பெற்றேன்
வாழ்க்கையே கற்ப்பிக்கும் பாடமென்று
அதனைப்படித்து வாழக்கற்றேன்
Sunday, September 16, 2012
காசேதான் கடவுளடா
நான் ஒழைச்சு சம்பாதிக்கிறேன். அந்த காசுல என் குடும்பம் நடக்கறது. எனக்கு தான் முதல் மரியாதை என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு இன்று சவால் விடுவதுப்போல் கல்லூரி படித்து முடித்த உடனேயே நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஒரு சவால்.
இதை ஒரு பத்திரிகையில் படிக்கும்பொழுது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பல ஆண்கள் தற்கொலைசெய்துக்கொள்கிறார்களாம்! தன் மகனோ மகளோ தன்னைவிட அதிகமாக சம்பாதித்து தன்னை அவமதிக்கிறார்கள் என்ற கவலைப்போல!
ஆனால் சிறு வயதிலேயே அந்த பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கற்றுக்கொடுப்பது யார்? அன்பும் ஆதரவும் கொடுத்திருந்தால் இன்று யார் சம்பளம் யாரைவிட பெரிது என்ற கேள்வி எழுந்திருக்குமா? தன்னுடைய அடையாளமே அந்த வாங்கும் சம்பளமும் அடையும் கவுரவமும் தான் என்று நாம் நினப்பதைத்தானே அந்த குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்? அப்போ அவர்களுக்கு சரியான வழிகாண்பிப்பது நம் கடமை அல்லவா? பணம், சம்பாத்தியம் முக்கியம் என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகி விடுமா?

Subscribe to:
Posts (Atom)