Sunday, September 16, 2012

காசேதான் கடவுளடா

நான் ஒழைச்சு சம்பாதிக்கிறேன். அந்த காசுல என் குடும்பம் நடக்கறது. எனக்கு தான் முதல் மரியாதை என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு இன்று சவால் விடுவதுப்போல் கல்லூரி படித்து முடித்த உடனேயே நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஒரு சவால்.

இதை ஒரு பத்திரிகையில் படிக்கும்பொழுது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பல ஆண்கள் தற்கொலைசெய்துக்கொள்கிறார்களாம்! தன் மகனோ மகளோ தன்னைவிட அதிகமாக சம்பாதித்து தன்னை அவமதிக்கிறார்கள் என்ற கவலைப்போல!

ஆனால் சிறு வயதிலேயே அந்த பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கற்றுக்கொடுப்பது யார்? அன்பும் ஆதரவும் கொடுத்திருந்தால் இன்று யார் சம்பளம் யாரைவிட பெரிது என்ற கேள்வி எழுந்திருக்குமா? தன்னுடைய அடையாளமே அந்த வாங்கும் சம்பளமும் அடையும் கவுரவமும் தான் என்று நாம் நினப்பதைத்தானே அந்த குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்? அப்போ அவர்களுக்கு சரியான வழிகாண்பிப்பது நம் கடமை அல்லவா? பணம், சம்பாத்தியம் முக்கியம் என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகி விடுமா?

2 comments:

  1. பிறரை விடக் கூடுதலாக உலகவசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள் (திருக்குர்ஆன் 102 1 -3 )

    ReplyDelete
    Replies
    1. Very rightly said! The key here is - more than others - a constant desire to be better than others, comparing and fretting... And unfortunately, we carry this discontent to our grave too.
      (Sorry, don't know how to reply in Tamil in the reply box).

      Delete