நமக்கு இயற்கை கொடுப்பது இயற்கையின் இயற்கை
அதற்கு திருப்பிக்கொடுப்பது நமக்கல்லவோ கடமை?
நவீன வளர்ச்சியில் அழிப்பதே மனிதனின் முத்திரை!
எவ்விடமும் குப்பைத்தொட்டிகளே, இது தரும் வியப்பை!
நீர், மண், வாயு, அக்னி, ஆகாசம்
எல்லாவற்றிலும் சேர்க்கப்படும் செயற்கை
சிறு சிந்தனையுடன் நடந்தால் வரும் மாற்றம்
இதற்கு நேரம் இல்லாமல் என்ன பெரிய வாழ்க்கை?
வசதி வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை
ஆனால் அதில் விளையும் தீங்குச் செயலை
அறிந்தும் செய்ய முயலும் உன் நெஞ்சை
கட்டுப்படுத்திக்கொண்டால் இல்லை தொல்லை
சிறிய சிறிய செயல்களால் பல நன்மை
அதை கவனமாக செய்தால் வரும் மேன்மை
யாரோ செய்வார்கள் என்ற நம்பிக்கை
அதை விட்டு நீ முன் வந்து எடு பொறுப்பை.
No comments:
Post a Comment